கிழக்கு திமோருக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் சிங்கப்பூர் அமைச்சர் முகமது மாலிகி ஒஸ்மான்!

Photo: Wikipedia

‘திமோர்- லெஸ்டே’ என்றழைக்கப்படும் கிழக்கு திமோர் தீவுக்கு மூன்று அரசுமுறைப் பயணமாக செல்கிறார் சிங்கப்பூர் அமைச்சர் முகமது ஒஸ்மான் மாலிகி.

வெளிநாட்டு ஊழியருக்கு செக்.. S$6,500 அபராதம் – இந்த தவறை மட்டும் ஒருபோதும் செய்யாதீர்கள்!

சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் (Ministry Of Foreign Affairs, Singapore) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சிங்கப்பூர் பிரதம அலுவலக அமைச்சரும், வெளியுறவுத்துறைக்கான இரண்டாவது அமைச்சரும், கல்விக்கான இரண்டாவது அமைச்சருமான டாக்டர் முகமது மாலிகி ஒஸ்மான் (Minister in the Prime Minister’s Office, Second Minister for Foreign Affairs and Second Minister for Education Dr Mohamad Maliki Osman), இன்று (18/05/2022) முதல் மே 20- ஆம் தேதி வரை கிழக்கு திமோர் (Timor-Leste) தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

கிழக்கு திமோர் தீவின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டாக்டர் ஜோஸ் ராமோஸ் ஹோர்டாவின் (President-elect Dr Jose Ramos-Horta) பதவியேற்பு விழாவில் கலந்துக் கொள்ளவிருக்கிறார். சிங்கப்பூர்- கிழக்கு திமோர் இடையே ராஜதந்திர உறவுகளை நிறுவியதன் 20- வது ஆண்டு விழாவையொட்டி, மே 20- ஆம் தேதி அன்று நடைபெறும் நிகழ்ச்சியிலும் அமைச்சர் கலந்துக் கொள்ளவிருக்கிறார்.

பயணிகளுக்கு தனிமை, சோதனை இல்லை; சிங்கப்பூருக்கு குவியும் பயணிகள் – விமான நிறுவனங்கள் மகிழ்ச்சி!

பின்னர், கிழக்கு திமோரின் முன்னாள் அதிபர், அளிக்கும் இரவு விருந்தில் பங்கேற்கும் சிங்கப்பூர் அமைச்சர், அந்நாட்டின் சுதந்திர தின நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவிருக்கிறார். சிங்கப்பூர் அமைச்சருடன் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் உயரதிகாரிகளும் கிழக்கு திமோர் தீவுக்கு செல்லவுள்ளனர்.” இவ்வாறு சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.