ஆஸ்திரேலிய கடற்படைத் தளபதிக்கு சிங்கப்பூரின் உயரிய விருது வழங்கப்பட்டது!

Photo: Ministry of Defence (MINDEF).

சிங்கப்பூருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய நாட்டின் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் மைக்கேல் நூனான் (Chief of the Royal Australian Navy (RAN) Vice Admiral (VADM) Michael Noona), பாதுகாப்புத்துறை அமைச்சகத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துக் கொண்டார். அப்போது அவருக்கு சிங்கப்பூர் அரசு சார்பில் அணி வகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, நடைபெற்ற விழாவில் ஆஸ்திரேலிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் மைக்கேல் நூனானுக்கு சிங்கப்பூரின் உயரிய மதிப்புமிக்க ராணுவ விருதான பிங்கட் ஜாசா கெமிலாங் (டென்டெரா) Pingat Jasa Gemilang (Tentera) விருதை சிங்கப்பூர் பாதுகாப்புத்துறை அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென் (Minister for Defence Dr Ng Eng Hen) வழங்கினார்.

தடுப்பூசியினால் ஏற்பட்ட பக்கவிளைவுக்கு அரசாங்க நிதி: சிங்கப்பூரில் 296 நோயாளிகள் தகுதி – நிதி உதவி எவ்ளோ தெரியுமா?

இது குறித்து சிங்கப்பூர் பாதுகாப்புத்துறை அமைச்சகம் (Ministry of Defence In Singapore) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சிங்கப்பூருக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான நெருங்கிய மற்றும் நீண்டகால இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை ஆழப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பிற்காக வைஸ் அட்மிரல் மைக்கேல் நூனானுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. தற்போது கொரோனா நிலைமை இருந்தபோதிலும், இரு கடற்படைகளும் 2020- ஆம் ஆண்டில் சிங்கரூ உடற்பயிற்சியின் 25- வது ஆண்டு நிறைவைக் கொண்டாடின. இது ஆஸ்திரேலிய (Royal Australian Navy-‘RAN’) மற்றும் சிங்கப்பூர் கடற்படை (Republic of Singapore Navy-‘RSN’) இடையே பகிரப்பட்ட நெருக்கமான ஒத்துழைப்பு, நட்பு மற்றும் நம்பிக்கைக்கு ஒரு சான்றாகும்.

குயின்ஸ்லாந்தில் (Queensland) உள்ள ஷோல்வாட்டர் பே (Shoalwater Bay) பயிற்சிப் பகுதியில் சிங்கப்பூர் கடற்படையின் கப்பல் முதல் கரை வரையிலான பயிற்சிக்கு வைஸ் அட்மிரல் மைக்கேல் நூனானின் வலுவான ஆதரவும், சிங்கப்பூர் கடற்படையின் செயல்பாட்டுத் தயார்நிலைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்தது. ஆஸ்திரேலிய கடற்படை மற்றும் சிங்கப்பூர் கடற்படைக்கு இடையேயான இருதரப்பு பரிமாற்றங்களுக்கான அவரது ஆதரவு தொழில்முறை நன்மைகளையும் அளித்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் தொடர்ந்து குறைந்து வரும் வேலையின்மை விகிதம்!

விழாவில் பேசிய ஆஸ்திரேலிய நாட்டின் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் மைக்கேல் நூனான், “சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென்னால் நேற்று (06/01/2022) பிங்கட் ஜசா ஜெமிலாங் (டென்டெரா) வழங்கப்பட்டதில் நான் மிகவும் தாழ்மையும், பாக்கியமும் அடைகிறேன். இந்த விருது எங்களுக்கிடையேயான வலுவான, உறுதியான மற்றும் வளர்ந்து வரும் நட்பைக் குறிக்கிறது. இரண்டு கடற்படைகளும், நானும், ஆஸ்திரேலியாவின் கடற்படைத் தளபதியாக நான் பதவி வகிக்கும் காலத்திற்கும் மேலாக அதை பொக்கிஷமாக வைத்திருப்போம்” என்றார்.