இந்தோனேசியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளும் சிங்கப்பூர் பாதுகாப்புத்துறை அமைச்சர்!

File Photo: Minister for Defence Dr Ng Eng Hen

சிங்கப்பூர் பாதுகாப்புத்துறை அமைச்சகம் நேற்று (31/10/2022) வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், “சிங்கப்பூர் பாதுகாப்புத்துறை அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென் (Minister for Defence Dr Ng Eng Hen), நவம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் இந்தோனேசியா நாட்டின் தலைநகர் ஜகார்த்தாவுக்கு அரசுமுறைச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

‘மதுரை, சிங்கப்பூர் இடையேயான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை’- விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டிக்கெட் முன்பதிவு!

சிங்கப்பூர் பாதுகாப்புத்துறை அமைச்சர், நவம்பர் 2- ஆம் தேதி அன்று இந்தோனேசியாவின் 9வது பாதுகாப்பு எக்ஸ்போவில் கலந்துக் கொள்கிறார். இதில், உலகளவில் பாதுகாப்பு, விண்வெளி, கடல் பாதுகாப்பு நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளனர்.

ஐயோ!என் மூக்கை விடு!! – சிங்கப்பூரில் மைனாக்களின் சண்டையை படம்பிடித்த நபர்;முகநூலில் விளக்கம்!

பின்னர், இந்தோனேசிய நாட்டின் தலைவர்களைச் சந்திக்கும் சிங்கப்பூர் பாதுகாப்புத்துறை அமைச்சர், இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்”. இவ்வாறு சிங்கப்பூர் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.