அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிப்பு!

Community leaders play vital role amid downturn: Iswaran
(PHOTO: Gov.sg's YouTube channel)

 

 

சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தலைமையிலான அமைச்சரவையில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருப்பவர், இந்தியா வம்சாவளியான எஸ்.ஈஸ்வரன். இவர் மீது ஊழல் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, பிரதமர் லீ சியன் லூங், விசாரணை முடியும் வரை விடுப்பில் செல்லுமாறு அமைச்சர் எஸ்.ஈஸ்வரனை அறிவுறுத்தினார். மேலும், மூத்த துணையமைச்சர் சீ ஹோங் டாட், தற்காலிகமாகப் போக்குவரத்துறையைக் கவனிப்பார் என்றும் பிரதமர் அறிவித்திருந்தார்.

டாக்ஸியில் இசைத்த பாடல்.. பிடித்து போய் $100 டிப்ஸ் வழங்கிய வெளிநாட்டு பயணி – அப்டி என்ன பாடல்?

முன்னதாக, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்- கைச் சந்தித்த லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவின் (Corrupt Practices Investigation Bureau- ‘CPIB’) இயக்குநர், அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் மற்றும் வேறு பலரை விசாரிக்க அனுமதி கோரியிருந்தார். இதற்கு மறுநாளே விசாரணை செய்வதற்கு பிரதமர் அனுமதி அளித்திருந்த நிலையில், அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் மற்றும் ஓங் பெங் செங் (Ong Beng Seng) ஆகியோரிடம் லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு எனப்படும் சிபிஐபி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டிருந்தனர்.

விசாரணை தொடர்பாக சிபிஐபி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சிபிஐபி அமைச்சர் எஸ்.ஈஸ்வரனை கைது செய்தது. அதேபோல், அதே தினத்தில் தொழிலதிபர் ஓங் பெங் செங்-கையும் அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர், இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர். விசாரணைக்கு அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் ஒத்துழைக்கிறார்.

சிங்கப்பூர் சட்டத்தின் படி, கைது செய்யப்பட்டவர்களின் பாஸ்போர்ட் முடக்கப்படும். ஆனால், தொழிலதிபர் ஓங் பெங் செங், சிபிஐபி-யிடம் தான் வெளிநாடு சென்று வருவதற்கு அனுமதிக் கேட்டு விண்ணப்பித்திருந்தார். இதையடுத்து, சில சட்டவிதிமுறைகளின் படி அவருக்கு மட்டும் வெளிநாடு செல்வதற்கு புலனாய்வு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

சிங்கப்பூரில் 10 நாள் நடந்த அதிரடி சோதனை – 508 பேர் விசாரணை வளையத்தில்…

மேலும், வெளிநாட்டுக்கு சென்று நாடு திரும்பிய உடன் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும்; பிணைத்தொகையாக தொழிலதிபர் சுமார் 1,00,000 வெள்ளியை செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தொழிலதிபரின் கைது தொடர்பான செய்தி வெளியான நிலையில், ‘HPL’ நிறுவனத்தின் பங்குகள், கடந்த வெள்ளிக்கிழமை கடும் சரிவைக் கண்டன. இதனால் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.