சிங்கப்பூரில் 10 நாள் நடந்த அதிரடி சோதனை – 508 பேர் விசாரணை வளையத்தில்…

508 nabbed illegal moneylending and scams
Photo: Getty

பல்வேறு குற்றங்களில் தொடர்புடைய சந்தேகத்தின்பேரில் சுமார் 508 பேர் விசாரணையில் உள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

சிங்கப்பூரில் 10 நாள் நடந்த அதிரடி சோதனை நடவடிக்கையில் அவர்கள் பிடிபட்டனர் என்றும், இதில் சுமார் $14.3 மில்லியன் மோசடி நடந்துள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

டாக்ஸியில் இசைத்த பாடல்.. பிடித்து போய் $100 டிப்ஸ் வழங்கிய வெளிநாட்டு பயணி – அப்டி என்ன பாடல்?

கள்ளப்பணத்தை நல்லபணமாக மாற்றியது மற்றும் மோசடி செய்தது உள்ளிட்ட 2,600 க்கும் மேற்பட்ட குற்றங்களில் அவர்களுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

அதில் 340 ஆண்கள் மற்றும் 168 பெண்கள் அடங்குவர், அவர்கள் 14 முதல் 71 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

அதில் மின்னணு வணிக மோசடி, முதலீடு, வேலைவாய்ப்பு, தொழில்நுட்ப ஆதரவு, குறுஞ்செய்தி மோசடி ஆகியவை அடங்கும்.

மேலும் 148 பேர் கடன் மோசடிகளில் ஈடுபட்டதாகவும், கடன் முதலை தொடர்பில் $300,000க்கும் அதிகமான பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

சிங்கப்பூரில் மேலும் ஒரு இந்திய ஊழியர் மரணம் – சாங்கி ஈஸ்ட் கட்டுமான தளத்தில் விபத்து