“சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு உதவ 100 ராணுவ வீரர்கள் பணியமர்த்தப்படுவர்”- சிங்கப்பூர் பாதுகாப்புத்துறை அமைச்சர் தகவல்!

Photo: Singapore Defence Minister Official Facebook Page

சிங்கப்பூரில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. புதிதாக நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானோருக்கு லேசான பாதிப்பு மட்டுமே என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் போலி சம்பள ஆவணங்களைக் காட்டி வங்கியில் கடன்; ஆடவருக்கு சிறை.!

எனினும், பொதுமக்கள் வெளியே செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்; கைகளை அடிக்கடி சோப்பு அல்லது கிருமிநாசினி கொண்டு கழுவ வேண்டும் உள்ளிட்ட அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும். அத்துடன் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிங்கப்பூர் பாதுகாப்புத்துறை அமைச்சர் இங் எங் ஹென் (Defence Minister Ng Eng Hen) தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “ஒமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கு சிங்கப்பூர் ராணுவத்தின் 100 வீரர்கள் பணியமர்த்தப்படுவர்.

வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண்ணை கடுமையாக தாக்கிய இந்திய வம்சாவளி இளைஞருக்கு சிறை

அதன்படி, ராணுவ வீரர்கள் தேசியத் தொலைபேசி அழைப்பு மையத்தில் (National Call Centre) பணியமர்த்தப்படுவர். அங்கு அவர்கள், கொரோனா மற்றும் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தேவையான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குவார்கள். வரும் வாரங்களில் வீரர்கள் பணியில் ஈடுபடுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.