சிங்கப்பூரில் காணாமல் போயிருந்த சிறுமி பத்திரமாக கிடைத்தார் – பகிர்ந்த Micset வாசகர்களுக்கு நன்றி!

jasmine-ng-jing-yan-missing
SPF

சிங்கப்பூரில் 2 நாட்களுக்கு மேலாக காணாமல் போயிருந்த சிறுமி தற்போது பத்திரமாக கிடைத்துள்ளார்.

ஜாஸ்மின் இங் ஜிங் யான் (Jasmine Ng Jing Yan) என்ற 12 வயதுமிக்க சிறுமியை காணவில்லை என்று நாம் முன்னர் பதிவிட்டு இருந்தோம்.

“முஸ்லீம் சமுதாய மக்களுக்கு நன்றி” தெரிவித்தார் சிங்கப்பூர் பிரதமர் லீ!

வெள்ளைச் சட்டை மற்றும் சாம்பல் நிற பேன்ட் அணிந்திருந்த ஜாஸ்மின், பிளாக் 187B Rivervale Dr. இல் கடைசியாக காணப்பட்டார் என சிங்கப்பூர் காவல் படை முன்னர் கூறியது.

இந்நிலையில், தற்போது அந்த சிறுமி பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் போலீசார் கூறியுள்ளனர்.

பகிர்ந்த அனைத்து மைக்செட் வாசகர்களுக்கும் நன்றியை இதன் வாயிலாக தெரிவித்துக்கொள்கிறோம்.

சிங்கப்பூரில் 12 வயது சிறுமியை 2 நாட்களுக்கு மேலாக காணவில்லை – கண்டுபிடிக்க உதவுங்கள் Micset வாசகர்களே!

மகளின் அறையில் ரகசிய கேமரா வைத்து ரசித்த கொடூர தந்தை: சிறை மற்றும் பிரம்படி விதிப்பு