சிங்கப்பூரில் 12 வயது சிறுவனை இரு நாட்களாக காணவில்லை – கண்டுபிடிக்க உதவுங்கள் வாசகர்களே!

File Photo : Singapore Police

சிங்கப்பூரில் காணாமல் போன 12 வயது சிறுவன் குறித்து போலீசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

சிறுவனை இரண்டு நாட்களாக காணவில்லை என்றும், அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்து தகவல் தெரிந்தால் தருமாறும் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கூர்மையான ஆயுதம் கொண்டு தாக்குதல்… CCTV மூலம் சிக்கிய இளைஞர் – அதிரடியாக கைது செய்த போலீஸ்

Ethan Yeo Jun Jie என்ற அந்த சிறுவன், கடைசியாக ஆகஸ்ட் 2 அன்று பிளாக் 13 ஃபெர்ன்வேல் குளோஸ் (Block 13 Fernvale Close) பகுதியில் காணப்பட்டார் என்று இன்று (ஆகஸ்ட் 4) போலீசார் தெரிவித்தனர்.

சிறுமி பற்றி தகவல் தெரிந்தவர்கள் 1800-255-0000 என்ற ஹாட்லைன் எண்ணை அழைக்கவும் அல்லது www.police.gov.sg/iwitness என்ற இணையதளத்தில் தகவலை சமர்ப்பிக்கவும்.

அனைத்து தகவல்களும் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.

சிங்கப்பூரில் மெல்ல மெல்ல உயரும் குரங்கம்மை பாதிப்பு