தவறுதலாக போடப்பட்ட 4வது டோஸ் தடுப்பூசி…பெண்ணின் மரணம் குறித்து தீவீர விசாரணை மேற்கொள்ளும் MOH

(photo: mothership)

நடமாடும் கோவிட்-19 தடுப்பூசி குழுவால், நான்காவது டோஸ் தடுப்பூசி தவறாகப் போடப்பட்ட 103 வயதுப் பெண்ணின் மரணம் குறித்து சுகாதார அமைச்சகம் (MOH) விசாரித்து வருகிறது.

முதியோர் இல்லத்தில் வசிக்கும் அந்த மூதாட்டிக்கு கூடுதலாக தடுப்பூசி டோஸ் போடப்பட்ட மூன்று நாட்களுக்குப் பின்னர் டிசம்பர் 16 அன்று சாங்கி பொது மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த ஊழியர்… வெளிநாட்டுக்குத் தப்பி, திருச்சி வந்தபோது கைது!

அவருக்கு நிமோனியா மற்றும் குறைந்த உப்பு அளவு, மேலும் பக்கவாதம் இருப்பதும் கண்டறியப்பட்டது. பின்னர் அந்த மூதாட்டி கடந்த ஜனவரி 10 அன்று இறந்தார்.

அவரின் பிரேத பரிசோதனையில், இறப்புக்கான முக்கிய காரணம் நிமோனியா என்று கூறப்பட்டது, மேலும் பக்கவாதம் மற்றும் இதய தமனி நோய் உள்ளிட்டவை கூடுதலாக சொல்லப்பட்டது.

இதுக்கும் தடுப்பூசிக்கும் தொடர்புள்ளதா என்பதை பிரேத பரிசோதனை நிபுணர் இன்னும் தீர்மானிக்கவில்லை.

இருப்பினும், இவை வயதானவர்களுக்கு பொதுவாக ஏற்படும் இயற்கையான நோய் என்று MOH வெள்ளிக்கிழமை (பிப் 4) அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தை தீவிரமாக எடுத்துக்கொள்வதாகவும், முழுமையான விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும், விசாரணை இந்த மாதத்தில் முடிவடையும் என்று MOH கூறியுள்ளது.

சிங்கப்பூர் காட்டில் 33 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்த மர்ம மனிதர் – யார் அவர்?