பாதிக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவிய அமைப்பு – விருது வழங்கி சிறப்பித்த MOM

(Photo: MOM)

சிங்கப்பூரில் HealthServe என்ற இலாப நோக்கற்ற அமைப்பானது கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவும் வகையில் 24 மணி நேர ஹெல்ப்லைன் சேவையை வழங்கும் இந்த அமைப்புக்கு மனிதவள அமைச்சகம் விருது வழங்கியுள்ளது.

தொற்று ஆபத்து அதிகமுள்ள சர்வதேச பயணிகளுக்கு கடுமையாக சோதனை – இந்தியா அலர்ட்

HealthServe தொடங்கியதிலிருந்து, ஒவ்வொரு மாதமும் சுமார் 400 அழைப்புகளைப் பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கடுமையான கோவிட்-19 நடவடிக்கைகள் இருந்த போதும், ஊழியர்களின் சொந்த நாடுகளில் இக்கட்டான சூழல் ஏற்பட்ட போதும், பண்டிகைக் காலங்களிலும் அதிக அழைப்புகள் அதற்கு வந்துள்ளன.

இந்த ஹெல்ப்லைன் சேவை, பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் மற்றும் ஆலோசகர்களால் நிர்வகிக்கப்படுகிறது, அவர்களில் சிலர் ஊழியர்களின் தாய்மொழியிலும் பதிலளிப்பார்கள்.

நீண்ட தனிமைப்படுத்தல் சிங்கப்பூரில் உள்ள புலம்பெயர்ந்த ஊழியர்களின் மன ஆரோக்கியத்தில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்று ஹெல்த் சர்வ் நிர்வாக இயக்குனர் திரு மைக்கேல் சீ கூறினார்.

இந்த சேவைக்காக, அமைச்சின் பாராட்டு நிகழ்வில் “MOM மதிப்புமிக்க கூட்டாளர்” (MOM Valued Partner Award) என்ற விருதை HealthServe பெற்றது.

தள்ளுபடியில் விமான டிக்கெட்டுகளை முன்கூட்டியே வாங்கலாம்.. எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்!!