சிங்கப்பூரில் தொழிலாளர்களை பாதுகாக்க இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்! – மனிதவள அமைச்சகத்தின் அதிரடி பரிசோதனை

foreign construction-worker-death
Photo: Construction Plus Asia
சிங்கப்பூரில் பணியிடங்களில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக தொழிலாளர்களின் மரணம் அடுத்தடுத்து நிகழ்கின்றன.இதுவரை 30-க்கும் மேற்பட்ட பணியிட உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக தரவுகள் கூறுகின்றன.பணியிடங்களில் தொழிலாளர்களுக்கு போதுமான பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய மனிதவள அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது.

இந்நிலையில் இரண்டு நிறுவனங்களின் பணியிடங்களில் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததால் அந்த நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.மேலும்,பணியை நிறுத்த உத்தரவிடப் பட்டது.சிங்கப்பூரில் பணியிடங்களில் தொழிலார்கள் உயிரிழப்பு,பலத்த காயம் அதிகமாகி வரும் நிலையில் அமைச்சகம் அதன் அமலாக்க முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளது.

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இரண்டு நிறுவனங்களிலும் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பது தெரிய வந்ததாக முகநூலில் அமைச்சகம் தெரிவித்தது.பாதுகாப்பற்ற செயல்முறைகளைக் காட்டும் ஏழு புகைப்படங்களை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டது.

பணியிட மரணங்கள் அதிகரித்து வருவதால்,இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.பாதுகாப்பு குறைபாடுகளுடன் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்துவது தெரிய வந்தால் mom.gov.sg/report-wsh-issues என்ற லிங்கின் மூலம் பொதுமக்கள் புகாரளிக்கலாம்.அல்லது 6438-5122 என்ற தொலைபேசி எண்ணிற்கு அழைக்கலாம்.

Ministry of Manpower Singapore
Use the MOM website feedback form to ask or feedback to us on MOM matters.