சிங்கப்பூரின் 2ஆம் கட்டத்தில், வீட்டுப் பணிப்பெண்களுக்கு மனிதவள அமைச்சகம் அறிவுரை

சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிட்
MOM

மனிதவள அமைச்சகம் (MOM) மே 21 அன்று வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த இரண்டாம் கட்ட பரவல் காலத்தில் வீட்டுப் பணிப்பெண்கள் அவர்களது ஓய்வு நாட்களில் அவர்களின் வீட்டிலையே இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அனைவருக்கும் பொருந்தக்கூடிய வகையில் வகுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மேலாண்மை நடவடிக்கைகளை முறையாக கடைபிடிக்கும் படி வீடுகளில் வேலை பார்க்கும் வெளிநாட்டு ஊழியர்களை MOM அறிவுறுத்தியுள்ளது.

இந்திய கோவிட் நிவாரண நிதிக்கு S$50,000 நன்கொடை வழங்கிய சிங்கப்பூர் சீன வர்த்தக தொழில் சபை

அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே செல்ல நேரிட்டால் பின்வருபவற்றை கடைபிடிக்கும் படி வீட்டுப் பணிப்பெண்கள் MOM கேட்டுக்கொண்டுள்ளது

  • எதையும் சுருக்கமாக மேற்கொள்ளவேண்டும்
  • நெரிசலான இடங்களைத் தவிர்க்கவும்
  • அதிகபட்ச குழு அளவாக இரண்டு நபர்கள் மட்டும் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்
  • குழுக்களுக்கு இடையில் ஒன்றிணையவேண்டாம்
  • உணவு, பானங்கள் அல்லது பாத்திரங்களைப் பகிர்த்து கொள்ளவேண்டாம்

மேலும், முதலாளிகள் ஊழியர்களிடம் பாதுகாப்பு விதிமுறைகளின் முக்கியத்துவத்தை அதில் ஈடுபடுத்திகொண்டு புரியவைக்கும்படி MOM கேட்டுக்கொண்டது. ஊழியர்களின் ஓய்வு நாட்களில் அவர்களை வேலைக்கு அழைக்க வேண்டாம் எனவும் MOM வலியுறுத்தி உள்ளது.

முதலாளிகள் மற்றும் அவர்களின் ஊழியர்கள் இந்த இக்கட்டான சூழலில் இணைத்து செயல்படுவதன் மூலம் அவர்கள் மட்டும் அல்லாது அவர்களின் குடும்பங்களையும் பாதுகாக்க முடியும் என MOM கேட்டுக்கொண்டுள்ளது.

பேஸ்புக் பதிவில் மனிதவள அமைச்சர் கன் சியோ ஹுவாங், முதலாளிகள் அவர்களின் ஊழியர்களுக்கு வார நாட்களில் ஒரு ஓய்வு நாள் வழங்க வேண்டும் எனவும், அந்த ஓய்வு நாளில் அவர்களை வீட்டிலையே தங்கும் படி கேட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தி இருந்தது.

மேலும் கன் கூறியதாவது; வார இறுதி நாட்களில் ‘ஹாட்ஸ்பாட்கள்லாக’ அறிவிக்கப்பட்ட பகுதிகளில் காவல்துறை ரோந்து பணி மேற்கொள்ளும் எனவும். இதுவரை ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பு விதிமுறைகளை நன்கு கடைபிடிப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

லாரி, வேன் விபத்து – இருக்கையில் சிக்கிய ஓட்டுநர் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு