சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்காக 6 புதிய மருத்துவ நிலையங்கள் திறக்கப்படும் – MOM

racist-passenger-india-Singapore
Pic: Raj Nadarajan/TODAY

சிங்கப்பூரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தற்போது வரையிலும் வெளிநாட்டு ஊழியர்களுக்காக வட்டார அளவில் 13 மருத்துவ நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் நலனுக்காக இந்த ஆண்டு இறுதிக்குள் வட்டார அளவில், 6 புதிய மருத்துவ நிலையங்களை திறக்க மனிதவள அமைச்சம் (MOM) திட்டமிட்டுள்ளது.

சிங்கப்பூர் நிரந்தர குடியுரிமைப் பெற்றவருக்கு 7,000 சிங்கப்பூர் டாலர் அபராதம்!

வெளிநாட்டு ஊழியர்களுக்காக திறக்கப்பட உள்ள மருத்துவ நிலையங்களில், அடிப்படை மருத்துவப் பராமரிப்பு, நாள்பட்ட நோய்களுக்கான சிகிச்சை மற்றும் X-ray போன்ற வசதிகள்  வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவும் வகையில், அவர்களது நாடுகளிலிருந்தே சுகாதார ஊழியர்கள் வரவழைக்கப்படுவர் என்றும், இதன் மூலம் மொழி, கலாசாரப் பிரச்சனைகள் இல்லாமல் மருத்துவ நிலையங்களில் வெளிநாட்டு ஊழியர்கள் சிகிச்சை பெற முடியும் என மனிதவள அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூரில் நீண்டகாலத் திட்டத்தை மனதில் கொண்டு புதிய மருத்துவ நிலையங்கள் திறக்கப்படுகிறது என்றும், இதன் மூலம் முதலாளிகள், ஊழியர்கள், அரசு ஆகிய அனைத்து தரப்புகளுக்கும் செலவு குறையும் என்றும் மனிதவள அமைச்சர் டான் சீ லெங் (Tan See Leng) தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் ஹெண்டர்சன் சாலை பிளாக்கில் உள்ள குடியிருப்பாளர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை.!