கொரோனா வைரஸ்; சிங்கப்பூர் விமான நிலையத்திற்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் அதிநவீன கருவிகள் மூலம் கண்காணிப்பு.!

Coronavirus measurements
Monitoring for all passengers arriving at Singapore airport

Coronavirus : கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறிவதற்காக சிங்கப்பூர் விமான நிலையத்திற்கு வரும் அனைத்து பயணிகளும் அதிநவீன கருவிகள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு சீனாவில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதில் 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையும் படிங்க : கொரோனா வைரஸ்: பணியிடங்கள் மற்றும் ஊழியர்களுக்கு மனிதவள அமைச்சகம் கூடுதல் ஆலோசனை..!

இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதலை கண்டறிய உலக நாடுகள் தங்களுடைய கண்காணிப்பை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் சிங்கப்பூர் விமான நிலையத்தில் நவீன கருவிகள் மூலம் பயணிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதில் 50 அடி தூரத்திலிருந்தே பயணிகளை ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்படுகின்றனர்.

பயணிகள் நடந்து செல்லும் பாதை, நகரும் நடைபாதை என அனைத்து இடங்களிலும் நவீன ஸ்கேனர் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு பயணிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்று தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க : புதிய பயண கட்டுப்பாடுகளை தொடர்ந்து 15 பேர் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி மறுப்பு..!

மேலும், விமான நிலையத்திற்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் முக கவசம் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

வணிக வளாகங்கள், சந்தைகள் என அனைத்து இடங்களிலும் ஊழியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக கவசம் அணிந்து பணியாற்றி வருகின்றனர்.

Source : Sun News