வூஹான் வைரஸ்: புதிய பயண கட்டுப்பாடுகளை தொடர்ந்து 15 பேர் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி மறுப்பு..!

Singapore following new travel restrictions : சீனாவிற்கு சமீபத்தில் சென்றுள்ளதாக பயண வரலாற்றைக் கொண்டவர்கள் சனிக்கிழமை (பிப்ரவரி 1) பிற்பகுதியில் பதின்மூன்று மணிநேரத்தில் 15 பயணிகள் சிங்கப்பூருக்குள் நுழைய மறுக்கப்பட்டுள்ளனர்.

இந்த கட்டுப்பாடுகள் கடந்த சனிக்கிழமை இரவு 11.59 மணிக்கு நடைமுறைக்கு வந்ததை அடுத்து, குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணி நிலவரப்படி 15 பயணிகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.

இதையும் படிங்க : வூஹான் வைரஸ்: சீனா மற்றும் சிங்கப்பூரின் தற்போதைய நிலவரம் என்ன..?

இதில் 5 சீன நாட்டினர், 5 இந்தியர்கள், 2 அமெரிக்கர்கள், ஒரு மலேசியர், ஒரு ஸ்பானியர், ஒரு பிரிட்டிஷ்காரர் ஆகியோர் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை என்று ICA தெரிவித்துள்ளது.

சீனாவில் பிரதான பகுதியில் இருந்து 14 நாட்களில் வந்த அனைத்து பயணிகளுக்கும், சிங்கப்பூருக்குள் நுழைவதற்கோ அல்லது செல்வதற்கோ தடை விதிக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : வூஹான் கொரோனா வைரஸ்: “சிங்கப்பூர் ஏர்ஷோ 2020” பார்வையாளர்களின் எண்ணிக்கை குறையுமா..?

மேலும், இந்த வூஹான் வைரஸைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் சிங்கப்பூர் அதிகப்படுத்தியுள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 360ஆக அதிகரித்துள்ளது என்று தற்போதைய அதிகாரப்பூர்வ (பிப். 3) நிலவரங்கள் தெரிவிக்கின்றன.