வூஹான் வைரஸ்: சீனா மற்றும் சிங்கப்பூரின் தற்போதைய நிலவரம் என்ன..?

China's death toll from a new coronavirus jumped above 360 on Monday (Feb 3)

சீனாவில் பரவி வரும் மர்மமான கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 360ஆக அதிகரித்துள்ளது என்று தற்போதைய அதிகாரபூர்வ (பிப். 3) நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த வைரஸ் தொற்றால் 14,380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அதிகாரப்பூர்வ ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இதையும் படிங்க : கொரோனா வைரஸ்; புதிதாக இருவரை உறுதிபடுத்திய சிங்கப்பூர் – மொத்தம் 18 ஆக உயர்வு..!

சீனாவிலிருந்து வரும் மக்கள் மீது பல நாட்டு அரசாங்கங்கள் முன்பு எப்போதும் இல்லாத வகையில் பயணத் தடைகளை விதித்த போதிலும், இந்த வைரஸ் 24க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது.

சிங்கப்பூரை பொறுத்தவரை இந்த கொரோனா வைரஸ் தொற்றால் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வைரஸ் தொற்று இல்லையென ரத்தப் பரிசோதனையில் உறுதியான நபர்கள் 240 மற்றும் சோதனை முடிவுகளுக்குக் காத்திருப்போர் எண்ணிக்கை 43 ஆகும்.

இதையும் படிங்க : வூஹான் கொரோனா வைரஸ்; தொய்வின்றி தீவிரமாக பணிகளை மேற்கொண்டு வரும் சிங்கப்பூர் ஆயுதப்படை..!

உலகளாவிய விவரங்கள்:

  • இந்தியா – 2
  • இலங்கை – 1
  • தாய்லந்து – 19
  • ஜப்பான் – 20
  • ஹாங்காங் – 15
  • தென் கொரியா – 15
  • தைவான் -10
  • ஆஸ்திரேலியா – 9
  • மலேசியா – 8
  • ஜெர்மனி – 10
  • மக்காவ் -7
  • பிரான்ஸ் – 6
  • அமெரிக்கா – 9
  • வியட்நாம் -5
  • ஐக்கிய அரபு அமீரகம்- 5
  • கனடா – 3
  • இத்தாலி – 2
  • ரஷ்யா-2
  • பிரிட்டன் – 2
  • நேபாளம் -1
  • கம்போடியா -1
  • ஸ்பெயின் – 1
  • ஃபின்லந்து – 1
  • பிலிப்பீன்ஸ் – 2
  • சுவீடன்- 1