வூஹான் கொரோனா வைரஸ்: “சிங்கப்பூர் ஏர்ஷோ 2020” பார்வையாளர்களின் எண்ணிக்கை குறையுமா..?

Wuhan coronavirus: Singapore Airshow organiser 'undoubtedly' expects fewer exhibitors, visitors

உலகளவில் இந்த மர்மமான வூஹான் வைரஸ் பரவிவரும் சூழலில், இந்த ஆண்டு சிங்கப்பூர் ஏர்ஷோவில் குறைவான கண்காட்சியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என அதன் அமைப்பாளர் கூறியுள்ளார்.

ஏனெனில், சிங்கப்பூர் இந்த கொடிய வூஹான் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த கூடுதல் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், அவர் கூறினார்.

இதையும் படிங்க : ஆசியாவின் மிகப்பெரிய “சிங்கப்பூர் ஏர்ஷோ 2020” – விமானக் கண்காட்சி..!

CNAவின் கேள்விகளுக்கு பதிலளித்த நிகழ்ச்சியின் அமைப்பாளர், “திட்டமிட்டபடி ஏர்ஷோ வரும் பிப்ரவரி 11 முதல் 16 வரை தொடரும், மேலும் கூடுதல் நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும்” என்று கூறியுள்ளார்.

“நாங்கள் தொடர்ந்து இந்த சூழலை உன்னிப்பாகக் கண்காணிக்கும் அதே வேளையில், தற்போதைய விரிவாக்கப்பட்ட நடவடிக்கைகள் சந்தேகத்திற்கு இடமின்றி இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் கண்காட்சியாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் எண்ணிக்கையில் குறைவைக் காணும்” என்று அந்த அமைப்பு வெள்ளிக்கிழமை (ஜனவரி 31) மாலை தெரிவித்துள்ளது.

சீனாவின் பிரதான நிலப்பகுதிக்கு சென்றுவந்த சமீபத்திய பயண வரலாற்றைக் கொண்ட எந்தவொரு நாட்டின் புதிய வருகையாளர்கள் சிங்கப்பூரில் நுழையவோ அல்லது செல்லவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அரசாங்கம் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : கொரோனா வைரஸ்; புதிதாக இருவரை உறுதிபடுத்திய சிங்கப்பூர் – மொத்தம் 18 ஆக உயர்வு..!

ஆரம்பத்தில், 50 நாடுகளைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட நிறுவனங்களும், 150 நாடுகளைச் சேர்ந்த சுமார் 55,000 வர்த்தக பிரமுகர்களும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த கண்காட்சியில் கடந்த 2018ஆம் ஆண்டு சுமார் 80,000 பேர் கலந்துகொண்டனர்.