குரங்கு அம்மை- விமான நிலையங்களுக்கு தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

File Photo: Chennai Airport

பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகளில் குரங்கு அம்மை தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், உலகின் பல்வேறு நாடுகளும் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவ்டிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றன.

வீட்டிலிருந்து வேலை செய்ய உலகின் சிறந்த நகரம் “சிங்கப்பூர்” – ஆய்வில் தகவல்

இந்தியாவில் குரங்கு அம்மை தொற்று கண்டறியப்படவில்லை என்றாலும், இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம், மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது.

இந்த நிலையில், குரங்கு அம்மை தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் தமிழக பொது சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது. இது தொடர்பாக, சென்னை, கோவை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி விமான நிலையங்களுக்கு தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் கடிதம் எழுதியுள்ளார்.

சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 3 ஊழியர்கள் மரணம் – குடும்பத்தை எண்ணி பாதுகாப்புடன் இருக்க வேண்டுகோள்!

அதில், வெளிநாட்டு பயணிகளிடம் குரங்கு அம்மை அறிகுறி ஏதேனும் இருந்தால் மாதிரிகளைப் பரிசோதிக்க வேண்டும். பிரிட்டன், அமெரிக்கா, ஸ்பெயின், சிங்கப்பூர், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருவோரைக் கண்காணிக்க வேண்டும். காய்ச்சல், தலைவலி, உடல்வலி, உடல்சோர்வு இருக்கும் பயணிகளின் மாதிரிகளை சேகரிக்க வேண்டும் என்று கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.