வீட்டிலிருந்து வேலை செய்ய உலகின் சிறந்த நகரம் “சிங்கப்பூர்” – ஆய்வில் தகவல்

சிங்கப்பூரில் வேலை தேடும் சிலருக்கு நற்செய்தி: புதிய Work Pass அறிமுகம்
(Photo: MOM/FB)

இந்த 2022 ஆண்டின் நிலவரப்படி, வீட்டிலிருந்து வேலை செய்ய சிறந்த நகரங்களின் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது.

வீட்டில் இருந்து பணிபுரிவது இன்றைய காலத்தில் பொதுவான அம்சமாக பார்க்கப்படுகிறது. ஆகையால், வீட்டில் இருந்து வேலை செய்யக்கூடியவர்கள் அதிகம் உள்ள நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது Kisi.

சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 3 ஊழியர்கள் மரணம் – குடும்பத்தை எண்ணி பாதுகாப்புடன் இருக்க வேண்டுகோள்!

இதில் ஒவ்வொரு நகரத்திலும் தொலைதூரத்தில் இருந்து பார்க்கக்கூடிய வேலைகளின் சதவீதமும், வீட்டில் இருந்து வேலை செய்வதற்கான சாத்தியக்கூறுகளும் அடங்கும்.

இந்த பட்டியலின்படி, சிங்கப்பூரில் 52.06 சதவீத ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை பார்ப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அதனை அடுத்து, வாஷிங்டன் மற்றும் ஆஸ்டின் ஆகிய இரண்டு அமெரிக்க நகரங்கள் பட்டியலில் அடுத்ததாக இடம் பெற்றுள்ளன.

சம்பளத்தை குறைத்து கொடுத்து, வெளிநாட்டு பணிப்பெண்ணை அடித்து தாக்கிய பெண்ணுக்கு சிறை மற்றும் அபராதம்