புதிதாக 145 புதிய உடற்பயிற்சி கூடங்கள் திறப்பு; மக்கள் ஆர்வம்.!

Singapore tightens Covid19 rules
Pic: Raj Nadarajan/TODAY

சிங்கப்பூரில் COVID-19 கிருமித்தொற்றுக்கு இடையே கடந்த 6 மாதங்களில் மட்டும் புதிதாக 145 உடற்பயிற்சி கூடங்கள் திறக்கப்பட்டுள்ளது.

கிருமித்தொற்று பரவலுக்கு முன்பைக் காட்டிலும் அவற்றிக்கான தேவை தற்போது அதிகரித்து உள்ளதாக பெரும்பாலான உடற்பயிற்சிக் கூடங்கள் தெரிவித்துள்ளது.

கடந்த 6 மாதங்களில், புதிதாக 145 உடற்பயிற்சி கூடங்கள் திறக்கப்பட்டுள்ள வேளையில், ஏற்கனவே செயல்பட்டு வந்த சில உடற்பயிற்சிக் கூடங்கள் மூடப்பட்டுள்ளது.

வேலையிட பாகுபாடு, தொல்லைக்கு எதிராக வலுவான சட்டங்கள் வேண்டும் – அரசாங்கத்திடம் கோரிக்கை

2021ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் உறுப்பினராக முன்பதிவு செய்துள்ளனர் என Body Fit Training நிறுவனம் கூறியுள்ளது.

தங்கள் எதிர்பார்த்ததைவிட கூடுதலானோர் பதிவு செய்து கொண்டலும், COVID-19
பாதுகாப்பு நடைமுறைகளை கருத்தில் கொள்ள வேண்டியிருப்பதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

Skypark Yoga எனப்படும் யோகாசன பயிற்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், அடுத்த வாரம் தொடங்கவிருக்கும் முதல் வகுப்புக்கான அனைத்து பதிவுகளும் நிரம்பிவிட்டதாக Virgin Active நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், COVID-19 இரண்டாம் கட்ட உயர் எச்சரிக்கை நிலையின்போது, உறுப்பினராக சேர்ந்தோர் எண்ணிக்கை 10 விழுக்காடு அதிகரித்துள்ளதாக Bespoke Fitness உடற்பயிற்சிக் கூடம் குறிப்பிட்டுள்ளது.

உலகின் தலைசிறந்த கடல்துறை நிலையம்: 8வது ஆண்டாக மாஸ் காட்டும் சிங்கப்பூர்.!