உலகின் தலைசிறந்த கடல்துறை நிலையம்: 8வது ஆண்டாக மாஸ் காட்டும் சிங்கப்பூர்.!

World maritime centre top
Pic: Port of Singapore

உலகின் தலைசிறந்த கடல்துறை நிலையம் என்ற பெருமையை தொடர்ந்து 8வது ஆண்டாக சிங்கப்பூர் மீண்டும் பெற்றுள்ளது.

Xinhua-Baltic என்ற அனைத்து உலகக் கப்பல் நிலைய மேம்பாட்டுக் குறியீட்டின் பட்டியலில் சிங்கப்பூர் மீண்டும் முதலிடத்தை பெற்றுள்ளதாக கடல்துறை, துறைமுக ஆணையம் கூறியுள்ளது.

நான்கில் மூன்று சதவிகிதம் பேருக்கு தடுப்பூசி போடுவதே இலக்கு, எல்லைகளில் கட்டுப்பாடுகளை தளர்க்க ஏற்பாடுகள்

துறைமுக வசதிகள், கடல்துறைச் சேவைகள் உள்ளிட்ட அம்சங்களை கருத்தில் கொண்டு, துறைமுக மற்றும் கப்பல் வணிகச் சேவைகளை வழங்கும் 43 நகரங்களை அனைத்துலக கப்பல் நிலைய மேம்பாட்டுக் குறியீடு சுயேச்சையாகப் பட்டியலிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரிவான கடல்துறைச் சேவைகள், வலுவான துறைமுக உள்கட்டமைப்பு ஆதரவான அரசாங்கக் கொள்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் சிங்கப்பூர் முதலிடத்தை பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

“புதுமை, வளர்ச்சி மற்றும் வேலைகளைத் தொடர்ந்து ஊக்குவிக்க வேண்டும்”- நிதியமைச்சர் லாரன்ஸ் வோங்!