மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் வரும் சுமார் 3,000க்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழப்பு

frozen chicken from indonesia poultry singapore

கடந்த சில நாட்களில் மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் வரும் சுமார் 3,000க்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்துள்ளன.

சிங்கப்பூர் வரும் சரக்கு லாரிகள், நுழைவு சோதனைச் சாவடிகளில் தாமதத்தை எதிர்கொண்டதை அடுத்து இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக கோழி இறக்குமதியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சிங்கப்பூரில் வரும் பிப்ரவரி 1 முதல் TraceTogether கருவி மீண்டும் விநியோகம்

சரக்கு லாரி ஓட்டுநர்களுக்கு COVID-19 ஆன்டிஜென் விரைவு சோதனை படிப்படியாக மேற்கொள்ளப்படும் என்று சிங்கப்பூரின் வர்த்தக மற்றும் தொழில் அமைச்சகம் (MTI) முன்பு அறிவித்தது.

இந்நிலையில், சரக்கு லாரி ஓட்டுநர்கள் துவாஸ் மற்றும் உட்லேண்ட்ஸ் சோதனைச் சாவடிகளில் வழக்கத்தை விட அதிக நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.

இதில் ஓட்டுநர்களுக்கு கிருமித்தொற்று இல்லை என்று உறுதியான பின்புதான் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப்படுவர்.

கடந்த ஜனவரி 27 மற்றும் அடுத்த நாள் பயணத்தின் போது சுமார் 3,500 கோழிகள் இறந்ததாக சிங்கப்பூரின் கோழி வணிகர் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் Wu Xiao Ting தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களாக சோதனை சாவடிகளில் நெரிசல் மோசமாக உள்ளது… வானிலையும் மிக வெப்பமாக உள்ளது, மேலும் காத்திருப்பு நேரமும் மிக அதிகமாக இருக்கிறது, அதனால் அந்த கோழிகள் இறந்துவிட்டதாக அவர் கூறினார்.

சிங்கப்பூரில் போதை ஒழிப்பு நடவடிக்கையின் போது 2 சந்தேக நபர்கள் கைது