“வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுப்பதில் அதிக வெளிப்படையாக நிறுவனங்கள் இருக்க வேண்டும்”…!

MORE TRANSPARENCY ON FOREIGN WORKFORCE
(PHOTO: Today)

சிங்கப்பூரில் நிறுவனங்கள், வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுப்பதில் முற்றிலும் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டு ஊழியர்களிடம் வேலைகளுக்கு ஏற்படும் போட்டியைக் குறைக்க, சிங்கப்பூர் ஊழியர்களுக்கு அதிக முன்னுரிமை அரசாங்கம் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இதையும் படிங்க : முஸ்தஃபா சென்டரில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு மாற்று வேலை தேடும் முயற்சியில் தொழிலாளர் சங்கம்.!

இன்று நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தின் இது பற்றி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

வேலைகளில் சேர்வதற்கான நியாயமான வாய்ப்புகள் சிங்கப்பூரர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது என்றும் பேசப்பட்டது.

சிங்கப்பூர் ஊழியர் அணியை நிறுவனங்கள் பலப்படுத்த கடுமையாகப் பாடுபட வேண்டியது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக நாடாளுமன்றத்தில் முதல் உரையாற்றிய டாக்டர் டான் குறிப்பிட்டார்.

இருப்பினும், தகுதி நிறைந்த வெளிநாட்டினரையும் வெளிநாட்டு முதலீடுகளின் முக்கியம் குறித்தும், சிங்கப்பூர் அவற்றை திருப்பி அனுப்பிவிடாது என்றும் நிறுவனங்களுக்கு உறுதி அளிக்கப்பட்டது.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் புதிதாக 41 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
 ? Facebook
? Twitter
? Telegram

? Sharechat

? Instagram