முஸ்தஃபா சென்டரில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு மாற்று வேலை தேடும் முயற்சியில் தொழிலாளர் சங்கம்.!

SMMWU working with Mustafa Centre to temporarily redeploy workers
Photo: 123RF

Singapore Mustafa centre : COVID-19 தொற்று காரணமாக வணிகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், வேலை அனுமதி காலாவதியாகும் வெளிநாட்டு ஊழியர்களை, முஸ்தபா சென்டர் சொந்த நாட்டுக்கு அனுப்பவுள்ளது.

இந்நிலையில், ஊழியர்கள் ஆள்குறைப்பு செய்யப்படுவதற்கு பதிலாக அவர்களுக்கு மாற்று வேலை தேடும் முயற்சிகளில் முஸ்தஃபா சென்டர் நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுவதாக Singapore Manual மற்றும் Mercantile Workers Union தொழிற்சங்கத் தலைமைச் செயலாளர் டேவிட் இயோ (David Yeo) கூறியுள்ளார்.

இதையும் படிங்க: வேலை அனுமதி காலாவதியாகும் வெளிநாட்டு ஊழியர்களைச் சொந்த நாட்டுக்கு அனுப்பும் முஸ்தஃபா சென்டர்..!

மேலும், ஊழியர்களுக்கு தற்காலிக வேலைவாய்ப்பு தொடர்பில் தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸின் வேலை நியமன, வேலைத்தகுதிக் கழகம், வேலைப் பாதுகாப்பு மன்றம் உள்ளிட்ட அமைப்புகளும் உதவிவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உணவு-பானத் துறை, சில்லறை விற்பனைத் துறை ஆகியவற்றில், தேவையுள்ள நிறுவனங்கள் நடத்தும் நேர்காணல்களில் பங்கேற்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கும் என்றும், அந்த நேர்காணல்களுக்குத் தயாராக, அவர்களுக்குப் பயிற்சியும் அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் புதிதாக 41 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!

COVID-19 கிருமித்தொற்றால் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குறைவான வர்த்தக நேரம், பாதுகாப்பு இடைவெளி நடைமுறைகள் ஆகியவற்றால் ஊழியர்கள் அனைவரையும் வேலைக்குத் திரும்ப அழைக்க முடியவில்லை என்று முஸ்தஃபா நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
 ? Facebook
? Twitter
? Telegram

? Sharechat

? Instagram