உஷார்… திரைப்பட டிக்கெட்கள் மூலம் உலாவரும் மோசடி கும்பல் – எச்சரிக்கை பதிவு

திரைப்பட டிக்கெட்களின் விற்பனையை அதிகரித்தால் உங்களுக்கு கமிஷன் வழங்கப்படும் என்ற வேலை மோசடி மீண்டும் தலை தூக்கியுள்ளது.

கடந்த மாதம் முதல் இது தொடர்பாக சுமார் 189 வேலை மோசடி வழக்குகளைக் கண்டறிந்துள்ளதாக காவல்துறை திங்கள்கிழமை (பிப் 21) கூறியது.

குறிப்பிட்ட நாட்டுக்கு செல்ல சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்துக்கு 2 வாரங்களுக்கு தடை – காரணம் என்ன?

நட்பாக பழகுவார்கள்

மேலும், திரைப்பட டிக்கெட்டுகளை வாங்குவது மற்றும் விற்பது சம்பந்தப்பட்ட மோசடி குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும் பொதுமக்களை காவல்துறை வலியுறுத்தியது.

இந்த வகையான மோசடிகளில் ஈடுபடுபவர்கள் முதலில் செய்தி அனுப்பும் செயலிகள் மூலம் தந்திரமாக நட்பாக பழகுவார்கள்.

பின்னர், திரைப்படங்களுக்கான டிக்கெட்களின் விற்பனையை அதிகரித்தால் உங்களுக்கு கமிஷன் கிடைக்கும் என்ற வேலை வாய்ப்புகளை தந்திரமாக அறிமுகப்படுத்துவார்கள்.

வங்கி கணக்கு

இதற்கு ஓகே சொல்லும் நபர்களுடன் மோசடி கும்பல் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ளும், மேலும் வங்கி கணக்கை Sign up செய்யுமாறும், அதில் கமிஷன் பணம் போடப்படும் என்றும் வலைத்தள முகவரி ஒன்றை அவர்கள் தருவார்கள்.

மோசடி செய்பவர்கள் பணம் செலுத்துவதற்காக முன்பின் அறியாத நபர்களின் வங்கிக் கணக்குகளை வழங்குவார்கள்.

அதனை அடுத்து, வேலை முடிந்த பிறகு தங்கள் கணக்குகளில் கமிஷன் பணம் காட்டப்படுவதால், இது நம்பகத்தன்மை வாய்ந்தது என்று பொதுமக்கள் நம்புவார்கள்.

மேலும் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முடியாதபோதுதான் அவர்கள் மோசடி செய்யப்பட்டதை உணருவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

தேடப்பட்டு வந்த ஊழியர்… சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்தபோது தூக்கிய போலீஸ்!