Mr Mookata உணவகத்தில் சட்டை அணியாத ஆண் சர்வர்கள்.. புதிய வியாபார யுக்தியா?

MR Mookata

சிங்கப்பூரில் தற்போது பல Mookata உணவகங்கள் அமைந்துள்ளன. குறிப்பாக அதில் ஒரு Mookata உணவகம், தனித்துமாக புதிய முயற்சியாக சட்டை அணியாத பணியாட்களை வேளையில் ஈடுபடுத்த உள்ளது.

Mr Mookata உணவகத்தில் சட்டை அணியாத ஆண்கள் பானங்களை வழங்குவார்கள் என்று இன்றைய ஜனவரி 8 இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் மூன்று இந்தியர்களுக்கு சிறை தண்டனை

ஜனவரி 8 மற்றும் 15 ஆகிய இரண்டு நாட்களில் மாலை 6:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை மட்டுமே இது நடக்கும் என்றும் Mr Mookata கூறியுள்ளது.

அந்த பதிவின் படி, உணவகத்தில் பஃபே உணவருந்துவோருக்கு இலவச ஃப்ளோ ஆசியா ஃபார்ம் பானங்களையும், ala-carte உணவருந்துபவர்களுக்கு ஒரு ஆசியா ஃபார்ம் பானத்தையும் வழங்குவதாக Mr Mookata தெரிவித்துள்ளது.

Mr Mookata உணவகம், 516 லியாங் சீ ஸ்ட்ரீட்டில் அமைந்துள்ளது, இது தினமும் மதியம் 12 மணி முதல் காலை 6 மணி வரை இயங்கும்.

சிங்கப்பூர் வாழ் தமிழ் மக்களுக்கு நற்செய்தி: “திருப்பதி – சிங்கப்பூர்” இடையே இனி பறக்கலாம்!