சிங்கப்பூரில், முஸ்லிம்கள் ரமலான் மாதத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா? – விளக்கம்

(PHOTO: Express & Star)

ரமலான் மாதத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்வதால் நோன்பு முறிந்துவிடாது என்று முயிஸ் என்னும் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் தெரிவித்துள்ளது.

கொவிட்-19 தடுப்பூசி மற்றும் மூக்கு திரவ பரிசோதனைகள் ஏற்றுக்கொள்ளலாம் என்றும் சமய மன்றம் தெரிவித்துள்ளது.

பேருந்தில் சிக்கி உயிரிழந்த ஆடவர் – கவனக்குறைவாக பேருந்தை இயக்கிய ஓட்டுநர் கைது!

இந்த நடவடிக்கைகளினால் நோன்பு முறிந்துவிடுமோ என்ற அச்சத்தின் காரணமாக முஸ்லிம்கள் சிலர் இதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் என்று சிங்கப்பூர் இஸ்லாமிய சமய தலைவர் முஃப்தி நசிருதீன் முகம்மது நசிர் கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் ரமலான் நோன்பு ஏப்ரல் 13 முதல் மே 12 வரை கடைபிக்கப்படும் என்றும், மருத்துவ வல்லுனர்களின் அறிவுரைகள் படி முன்னெச்சரிக்கைகளுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதோடு தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களையும் போட்டுக்கொள்ள ஆர்வமூட்டி வருகிறார்கள், அவர்களுக்கு தன்னுடைய நன்றிகளையும் முஃப்தி தெரிவித்துள்ளார்.

முயிஸ் அலுவலகம் சமயம் தொடர்பான வினா விடை மற்றும் கிருமித்தொற்று சம்பந்தமான ஆலோசனைகளும் அடங்கிய புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

சிங்கப்பூர் பள்ளிவாசல்களில் கொவிட்-19 வரம்புகளுடன் ரமலான் மாத சிறப்புத் தொழுகைகள் நடைபெறும் என்று முஃப்தி கூறியுள்ளார்.

கப்பலில் உள்ள கருவி தவறி விழுந்ததால் ஊழியர் உயிரிழந்தார்..!