“இந்தியர்கள் ஓராண்டில் 180 நாட்கள் வரை தங்கலாம்…..புதிய விசா அறிமுகம்….அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நாடு!”

Photo: Changi Airport

 

இந்தியர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு பலமுறை வந்துச் செல்ல அனுமதிக்கும் புதிய விசாக்களை அறிமுகப்படுத்தியுள்ளதாக துபாய் அரசு தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் இருந்து வந்த நபரிடம் ரூபாய் 10 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!

துபாய் அரசின் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2023- ஆம் ஆண்டு மட்டும் 25 லட்சம் இந்தியர்கள் துபாய் வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேறு எந்த நாடுகளையும் விட, இந்தியாவில் இருந்து தான் சுற்றுலாப் பயணிகள் துபாய்க்கு அதிகம் வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தியர்கள் துபாய்க்கு வருவதை ஊக்கப்படுத்தும் வகையில் ஐந்து ஆண்டுகளில் பலமுறை வந்துச் செல்லக்கூடிய வகையில் புதிய விசா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் வணிக நோக்கிலும், சுற்றுலா நோக்கிலும் வருபவர்கள் பலனடைவார்கள் என்று கூறப்படுகிறது. மேலும், இந்தியர் ஒருவர் இந்த விசாவின் கீழ் வந்தால் ஓராண்டில் அதிகபட்சம் 180 நாட்கள் வரை தங்கியிருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் TOTO லாட்டரி: வெளிநாட்டவர்களுக்கும் டிக்கெட் வாங்கும் நபர் – அதுவும் இலவசமாக

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு பகுதிகளில் ஒன்றாக துபாய் விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.