‘முஸ்லிம் வாடிக்கையாளர்களுக்கு நோன்பு துறப்பதற்கான அன்பளிப்பு பொட்டலங்கள்’- ‘NTUC FairPrice’ குழுமம் அறிவிப்பு!

'முஸ்லிம் வாடிக்கையாளர்களுக்கு நோன்பு துறப்பதற்கான அன்பளிப்பு பொட்டலங்கள்'- 'NTUC FairPrice' குழுமம் அறிவிப்பு!
Photo: NTUC FairPrice

 

சிங்கப்பூரில் பிறை தென்பட்டதால் நேற்று (மார்ச் 12) முதல் முஸ்லிம்கள் நோன்பைக் கடைப்பிடித்து வருகின்றனர். இந்த நிலையில், சிங்கப்பூரில் உள்ள மிகப்பெரிய அங்காடி நிறுவனங்களில் ஒன்றான ‘NTUC FairPrice’ குழுமம் முஸ்லிம் வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

‘சோதனைச் சாவடிகளில் QR குறியீட்டை ஸ்கேன் செய்து கடக்கும் வசதி’- ICA- வின் முக்கிய அறிவிப்பு!

அதில், சிங்கப்பூரில் உள்ள 61 ‘NTUC FairPrice’ குழுமத்தின் கிளைகளிலும், முஸ்லிம் வாடிக்கையாளர்களுக்கு குடிநீர், குளிர் பானங்கள், பேரீச்சம் பழம், மாட்டு இறைச்சித் துண்டு உள்ளிட்டவை அடங்கிய நோன்பு துறப்பதற்கான அன்பளிப்பு பொட்டலங்கள் வழங்கப்படும். சுமார் 60,000- க்கும் மேற்பட்ட பொட்டலங்கள் வழங்கப்படும்.

மெரினா பே சாண்ட்ஸில் இருந்து கீழே விழுந்த ஆடவர்.. சம்பவ இடத்திலேயே மரணம்

மார்ச் 12- ஆம் தேதி முதல் ஏப்ரல் 09- ஆம் தேதி வரை நோன்பு துறக்கும் நேரத்திற்கு 30 நிமிடங்கள் முன்பாகவும், பின்பாகவும் அன்பளிப்பு பொட்டலங்களை முஸ்லிம் வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம். ‘NTUC FairPrice’ குழுமம் 16 வது ஆண்டாக அன்பளிப்புப் பொட்டலங்களை வழங்குகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.