சிங்கப்பூர் முஸ்தபா சென்டர் மூடல் நீட்டிப்பு – சுகாதார அமைச்சகம்..!

Mustafa Centre shuts temporarily after Covid-19 cluster surfaces
Mustafa Centre shuts temporarily after Covid-19 cluster surfaces

சிங்கப்பூரில் COVID-19 வைரஸ் பரவும் புதிய குழுவாக கண்டறியப்பட்ட பின்னர் மெகமால் முஸ்தபா சென்டர் குறைந்தது இரண்டு வாரங்களுக்கு மூடப்படும் என்று அதன் நிர்வாகம் கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி தெரிவித்தது.

அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் பலர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் நிலவரப்படி 87 பேருக்கு அந்த குழுமத்துடன் தொடர்பு உள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மலேசிய நாட்டை சேர்ந்தவர் உயிரிழப்பு; COVID-19 காரணமில்லை – MOH..!

அவர்களில் பெரும்பாலானோர் நிறுவன ஊழியர்கள் என்றும், மற்றவர்கள் அவர்களின் குடும்பத்தார் என்றும் முஸ்தஃபா சென்டரின் மனிதவளப் பிரிவின் மேலாளர் முஹம்மது கவுஸ் தெரிவித்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் (ஏப்ரல்16) அங்கு பேரங்காடிப் பிரிவும் மருந்தகப் பிரிவும் திறக்கப்படவிருந்தன.

ஆனால் மேலும் இரு வாரங்களுக்குக் கடை மூடியிருக்க வேண்டும் என சுகாதார அமைச்சகம் அறிக்கை பிறப்பித்ததைத் தொடர்ந்து கடை இன்னும் திறக்கப்படவில்லை என்று முஹம்மது கவுஸ் தெரிவித்தார்.

அதாவது தற்போதைய அறிவிப்பின்படி, இம்மாதம் 29ஆம் தேதி வரையில் கடை மூடப்பட்டிருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

முஸ்தஃபா சென்டர் கடந்த 2ஆம் தேதி COVID-19 நோய்த்தொற்று குழுமமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடப்பட்டது.

Source : Tamil Murasu

இதையும் படிங்க : சிங்கப்பூரில் புதிதாக 596 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!