மலேசியாவில் தனது நிறுவனத்தின் முதல் கடையைத் திறக்கும் முஸ்தபா!

Google Maps

சிங்கப்பூரின் சையது ஆல்வின் சாலையில் (Syed Alwi Road) அமைந்துள்ளது ‘முஸ்தபா சென்டர்’ (Mustafa Centre). இது ஒரு சில்லறை விற்பனை கடை ஆகும். இங்கு காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்தும் உள்ளது. குறிப்பாக, சொல்லவேண்டுமென்றால் இந்திய பொருட்கள் அனைத்தும் இந்த டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் கிடைக்கும்.

ஐஸ்க்ரீம் குச்சிகளைக் கொண்டு பாரதியார், திருவள்ளுவர் உருவப்படங்களை உருவாக்கி அசத்தல்!

சிங்கப்பூரில் மிக பிரபலமான கடைகளில் ஒன்று முஸ்தபா. இந்த நிலையில், மலேசியா நாட்டில் தனது முதல் கடையை முஸ்தபா திறக்கவுள்ளது. ஜோகூர் பாருவில் (Johor Bahru) உள்ள கேப்பிட்டல் வோர்ல்டு நிறுவனத்துக்கு சொந்தமான ஷாப்பிங் மாலில் (Capital City Mall) முஸ்தபா டிபார்ட்மெண்ட் ஸ்டோர் அமையவுள்ளது.

தம்போயில் (Tampoi) உள்ள மாலில் சுமார் 591 கடைகள், 2,181 கார் நிறுத்துமிடங்கள் என 1.28 மில்லியன் சதுர அடி பரப்பளவு கொண்டது. இது மாலின் பெரும் பகுதி ஆகும். இந்த இடத்தை சுமார் 113.7 மில்லியன் சிங்கப்பூர் டாலருக்கு கேப்பிட்டல் வோர்ல்டு நிறுவனம் (Capital World), முஸ்தபா நிறுவனத்திற்கு விற்பனை செய்ய உள்ளது.

சொந்த நிறுவனத்தைத் தொடங்கியுள்ள சிங்கப்பூர் இளைஞர்! – தொழிலுக்கு புத்துயிர் கொடுக்க முயல்வதாக பேச்சு…

கேப்பிட்டல் வோர்ல்டு நிறுவனம், இந்த ஷாப்பிங் மாலை கடந்த 2018- ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திறந்த நிலையில், நிதி சிக்கல், கடன் சுமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், கடந்த 2020- ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மூடப்பட்டது.

நடப்பாண்டு இரண்டாம் பாதியில் முஸ்தபா டிபார்ட்மெண்ட் ஸ்டோர் மற்றும் கேப்பிட்டல் சிட்டி மால் ஆகிய இரண்டும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.