சிங்கப்பூரில் பழமை வாய்ந்த ‘Nam Seng Wanton’ நூடுல்ஸ் உணவகத்தின் நிறுவனர் காலமானார்!

சிங்கப்பூரில் பழமை வாய்ந்த 'Nam Seng Wanton' நூடுல்ஸ் உணவகத்தின் நிறுவனர் காலமானார்!
Top photo from BestFoody Singapore/Facebook & Jensen Tan/Google Maps.

 

சிங்கப்பூரில் பழமை வாய்ந்த ‘Nam Seng Wanton’ நூடுல்ஸ் உணவகத்தின் நிறுவனர் லியோங் யுயெட் மெங் (Leong Yuet Meng) நேற்று (பிப் .07) காலமானார். அவருக்கு வயது 94. லியோங் யுயெட் மெங் மறைவுக்கு சிங்கப்பூர் வியாபாரிகள் சங்கம் மற்றும் மற்ற சங்கங்கள், பல்வேறு அமைப்புகளும் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

பொதுமக்களுக்காக திறக்கப்படும் இஸ்தானா: சிங்கப்பூரர்கள்& PR’களுக்கு இலவசம் – மற்றவர்களுக்கு கட்டணம்

பிப்ரவரி 07, 08 ஆகிய தேதிகளில் புளாக் 228A தோ பயோஹ் லோரோங் 8- ல் (228A Toa Payoh Lorong 8) லியோங் யுயெட் மெங்- கின் உடல் வைக்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 09- ஆம் தேதி இறுதி ஊர்வலமாக அவரது உடல் கொண்டு செல்லப்பட்டு, இறுதிச்சடங்குகள் முறைப்படி நடைபெறும்.

சிவராத்திரியையொட்டி, ஸ்ரீ சிவ கிருஷ்ண ஆலயத்தில் பூஜை!

லியோங் யுயெட் மெங் குறித்து விரிவாகப் பார்ப்போம்!

சிங்கப்பூரில் உள்ள மிகப் பழமையான வியாபாரிகளில் ஒருவராக அறியப்பட்டவர் லியோங் யுயெட் மெங். இவர் கடந்த 1958- ஆம் ஆண்டு சிங்கப்பூரின் தேசிய நூலகம் (National Library) அருகில் ‘Nam Seng Wanton’ நூடுல்ஸ் உணவகத்தைத் திறந்துள்ளார். தற்போது இவரது நூடுல்ஸ் உணவகம் சீனா தெருவில் (China Street) அமைந்துள்ளது. மதிய வேளையில் நீண்ட வரிசையில் காத்திருந்து, இந்த உணவகத்தில் தங்களுக்கு வேண்டிய உணவுகளை வாடிக்கையாளர்கள் வாங்கிச் செல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.