சிவராத்திரியையொட்டி, ஸ்ரீ சிவ கிருஷ்ண ஆலயத்தில் பூஜை!

சிவராத்திரியையொட்டி, ஸ்ரீ சிவ கிருஷ்ண ஆலயத்தில் பூஜை!
Google Image

 

மாதாந்திர சிவராத்திரியையொட்டி, சிங்கப்பூரில் உள்ள மார்சிலிங் ரிஷ் (Marsiling Rise Road) சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ சிவ கிருஷ்ண ஆலயத்தில் (Sri Siva Krishna Temple) இன்று (பிப்.08) சிறப்பு பூஜைகள் நடைபெறும் என ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.

மெரினா பே சாண்ட்ஸ் அருகே நீரில் மிதந்த இளைஞர் சடலம் – யார் அவர்?

இன்று (பிப்.08) வியாழன்கிழமை காலை 05.30 மணிக்கு ஸ்ரீ சிவ கிருஷ்ண ஆலயத்தில் உள்ள சிவனுக்கு அபிஷேகமும், காலை 06.00 ஆலய நித்ய பூஜையும், காலை 06.30 மணிக்கு ஸ்ஹஸ்ரநாம அர்ச்சனையும், காலை 07.00 மணிக்கு தீபாராதனையும், காலை 07.15 மணிக்கு பிரசாதம் வழங்குதலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த பூஜையில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பொதுமக்களுக்காக திறக்கப்படும் இஸ்தானா: சிங்கப்பூரர்கள்& PR’களுக்கு இலவசம் – மற்றவர்களுக்கு கட்டணம்

சிறப்பு அபிஷேகத் தட்டுக்கு 11 வெள்ளி கட்டணமாகவும், தேங்காய் அர்ச்சனைக்கு 1.50 வெள்ளி கட்டணமாகவும், பால்- க்கு 2 வெள்ளி கட்டணமாகவும், ரோஜா மாலைக்கு 10 வெள்ளி கட்டணமாகவும், உதிரி பூக்கு 1 வெள்ளி கட்டணமாகவும் ஆலயத்தில் செலுத்தி அதற்குரிய ரசீது பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.