சிங்கப்பூரில் களைகட்டிய தேசிய தினக் கொண்டாட்டங்கள்!

Singapore National day fireworks
Pic: Ooi Boon Keong/TODAY

 

 

58வது தேசிய தினக் கொண்டாட்டங்கள் சிங்கப்பூரில் களைகட்டியுள்ளன.

‘திருச்சி, சிங்கப்பூர் இடையேயான இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவை’- அக்டோபர் மாதம் வரையிலான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

தேசிய தினத்தையொட்டி, சிங்கப்பூரில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், சிங்கப்பூரில் உள்ள முக்கிய இடங்களில் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் பல்வேறு அமைப்புகள் தேசிய தினத்தை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

குறிப்பாக, மரினா பேவில் நடைபெறும் தேசிய தின விழாவில், சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல்வேறு நாடுகளின் தூதரக அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என 1,000- க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

“வீடமைப்புத் திட்டங்களில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும்”- தேசிய தினச் செய்தியில் பிரதமர் லீ சியன் லூங் தகவல்!

நாட்டின் வலிமையைப் பறைச்சாற்றும் வகையில், சிங்கப்பூர் ராணுவம், விமானப் படை, கப்பற்படை ஆகிய மூப்படைகளின் அணி வகுப்பு நிகழ்ச்சிகளும், வான் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும், சிங்கப்பூரின் சிங்க நடனமும் இடம் பெறவுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, சிங்கப்பூரின் முக்கிய பகுதிகளில் இன்று இரவு 07.00 மணிக்கு கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது. தேசிய தினத்தையொட்டி, நாடு முழுவதும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.