‘திருச்சி, சிங்கப்பூர் இடையேயான இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவை’- அக்டோபர் மாதம் வரையிலான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

Photo: Indigo Airlines

 

திருச்சி, சிங்கப்பூர் இடையே இருமார்க்கத்திலும் தினசரி நேரடி விமான சேவைகளையும், சென்னை, பெங்களூரு ஆகிய நகரங்கள் வழியாக விமான சேவைகளையும் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த வழித்தடத்தில் மட்டும் தினசரி ஏழு விமான சேவைகளை வழங்கி வருகிறது.

சிங்கப்பூரில் திடீரென தோன்றிய மர்ம கருப்பு வளையம்: என்ன அது? – பொதுமக்கள் குழப்பம்

இந்த வழித்தட விமான சேவைக்கான ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையிலான விமான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விமான பயண அட்டவணை மற்றும் பயண டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.goindigo.in/ என்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு விமான சேவைகளை அதிகரிக்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

கொரோனா பரவலுக்கு பிறகு உலகளவில் சர்வதேச விமான சேவைகள் மற்றும் உள்நாட்டு விமான சேவைகள் உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில் விமானத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.