“நமது சிங்கப்பூர் வெள்ளியை வலுப்படுத்தியுள்ளோம்”- அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் உரை!

Photo: Prime Minister Office Singapore

சிங்கப்பூரின் தேசிய தினத்தையொட்டி, தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு பிரதமர் லீ சியன் லூங் இன்று (09/08/2022) காலை உரையாற்றினார். அதைத் தொடர்ந்து, பிரதமரின் உரையை தமிழ், மலாய், சைனீஸ் ஆகிய மொழிகளில் அமைச்சர்கள் வழங்கினர். அந்த வகையில், சிங்கப்பூரின் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன், பிரதமரின் தேசிய தின உரையை தமிழில் வழங்கினார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கரின் ட்விட்டர் பதிவு! – சிங்கப்பூர் அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் தெரிவித்தது என்ன?

அப்போது அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் கூறியதாவது, “நாம் கோவிட்-19 நோய்ப்பரவலுடன் இரண்டரை ஆண்டுகளாகப் போராடி எவ்வளவோ சிரமங்களை எதிர்கொண்டோம். ஆனால் ஒன்றுபட்ட மக்களாக அதனைக் கடந்து இப்போது நல்ல நிலையில் இருக்கிறோம். நம் மக்களில் பெரும்பாலோர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். நமது மருத்துவமனைகளும் மருந்தகங்களும் அதிக நோயாளிகளைச் சந்தித்தாலும் நிலைமையைச் சமாளிக்கின்றன. புதிய ரகக் கிருமியால் அதிகமான கோவிட் சம்பவங்கள் பதிவாகின்றன. எனினும் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு நாம் திரும்பவில்லை.

கோவிட்-19 நோய்ப்பரவலுக்கு எதிராகப் போராடிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. நம் சமுதாயம் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையே இந்த வெற்றிக்குக் காரணம். அரசாங்கம் சொன்ன ஆலோசனைகளைக் கேட்டு நடந்தீர்கள். சிரமம் என்றபோதிலும் பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகளைப் பின்பற்றினீர்கள். முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டீர்கள்.

சிங்கப்பூர் தேசிய தினம்: வாணவேடிக்கைகளை எங்கே காணலாம்? நேரம் என்ன? யாருக்கு அனுமதி – முழு ரிப்போர்ட்

ஆனால் இவை எல்லாவற்றையும்விட முக்கியமானவை சிங்கப்பூரர்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் நம்பிக்கை. சக குடிமக்களின் நலனில் அக்கறை காட்டி எல்லா வகைகளிலும் ஆதரவு கொடுத்தீர்கள். இந்த ஆதரவும் உங்கள் நம்பிக்கையும்தான் நமக்கு வேண்டிய பலத்தைக் கொடுத்தது.

கோவிட்-19 ஒரு தலைமுறை முழுவதையும் சோதனைக்குள்ளாக்கியது. நாம் அதிலிருந்து வலுவுடன் மீண்டு அதிக வலிமையாகவும், ஒற்றுமையாகவும் இருக்கிறோம். இந்த ஒற்றுமை இனிவரும் காலத்திற்கு மிகவும் முக்கியம்.

பெற்ற மகளிடம் அப்பா செய்யும் காரியமா இது! – சிங்கப்பூரில் தாய் இறந்த பிறகு தந்தைக்கு கிடைத்த தண்டனை!

நாம் நமது சிங்கப்பூர் வெள்ளியை வலுப்படுத்தியுள்ளோம்; பொருள் இறக்குமதியால் ஏற்படும் பணவீக்கத்தைக் குறைப்பதற்காக, ஆனால் அனைத்துலகப் பொருளாதாரச் சூழல் மாறிவிட்டது. குறைவான பணவீக்கமும் வட்டி விகிதமும் மீண்டும் திரும்புமா என்பது கேள்விக்குறியே. இந்தச் சூழலை எதிர்கொள்ள சிங்கப்பூர் அதன் தொழில்துறையை மாற்றியமைக்க வேண்டும். ஊழியர்களின் ஆற்றலை மேம்படுத்தி உற்பத்தித் திறனை அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் சம்பளம் பணவீக்கத்தைவிட அதிகமாக உயரும்” எனத் தெரிவித்துள்ளார்.