13 மாதங்களுக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பச்சிளங் குழந்தை!

Photo: National University Hospital

 

-சிங்கப்பூரில் நிரந்தர குடியுரிமைப் (Singapore Permanent Resident) பெற்று இங்கேயே தொழிற் நிறுவனங்களில் பணியாற்றி வரும் தம்பதிக்கு, கடந்த ஆண்டு ஜூன் மாதம் 9- ஆம் தேதி அன்று தேசிய பல்கலைக்கழகத்தின் மருத்துவமனையில் (National University Hospital- ‘NUH’) ஒரு அழகான பெண் குழந்தைப் பிறந்தது. இந்த குழந்தைக்கு க்வெக் யு சுவான் (Kwek Yu Xuan) என்று பெயர் சூட்டப்பட்டது. பிரசவ தேதிக்கு முன்னதாக, அதாவது நான்கு மாதங்களுக்கு முன்கூட்டியே குழந்தை பிறந்ததால், பச்சிளங் குழந்தையின் எடை 212 கிராம் அளவிலும், நீளம் 24 சென்டிமீட்டர் மட்டுமே இருந்தது. இதனால், குழந்தையை டிஸ்சார்ஜ் செய்யாத மருத்துவர்கள், குழந்தையை சுமார் 13 மாதங்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.

இதன் பயனாக, குழந்தையின் எடை 6.3 கிலோ கிராமாக அதிகரித்து, நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தது. இதையடுத்து, பச்சிளங் பெண் குழந்தை நேற்று (07/08/2021) மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது. அது உலகிலேயே ஆகக் குறைவான எடையில் பிறந்து நலமுடன் வீடு திரும்பிய குழந்தை என நம்பப்படுகிறது.

ஃபைசர் தடுப்பூசி போட இனி முன்பதிவு அவசியமில்லை…

இந்த பச்சிளங் குழந்தையின் சிகிச்சைக்கு மட்டும் சுமார் 2,30,000 சிங்கப்பூர் டாலர் செலவாகியுள்ளது. முன்னதாக, குழந்தையின் சிகிச்சைக்கு உதவுமாறு, அந்த குழந்தையின் பெற்றோர் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், Give.asia என்ற நன்கொடைப் பக்க இணையதம் மூலம் குழந்தைக்காக 3,66,884 சிங்கப்பூர் டாலர் நிதி திரட்டப்பட்டது.

இந்த நிதி உடனடியாக குழந்தையின் பெற்றோருக்கு வழங்கப்பட்டது. நிதியைப் பெற்று கொண்டவர்கள், குழந்தையின் சிகிச்சைக்கு போக எஞ்சிய நிதியை கடும் சிரமத்தில் உள்ள மற்றவர்களுக்கு கொடுத்து உதவினர்.

700க்கும் மேற்பட்ட முன்னாள் குற்றவாளிகளுக்கு வேலை வாய்ப்பு!

குழந்தைக்கு சிறப்பான சிகிச்சை அளித்து, அதன் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு பொதுமக்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் நன்றிகளைத் தெரிவித்து வருகின்றனர்.

மலேசியாவைச் சேர்ந்த இந்த தம்பதிக்கு நான்கு வயதில் மகன் ஒருவர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.