பக்தர்களின் கவனத்திற்கு…..ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் நவராத்திரி விழா!

பக்தர்களின் கவனத்திற்கு.....ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் நவராத்திரி விழா!
Photo: HEB

 

சிங்கப்பூரில் உள்ள பிரசித்திப் பெற்ற ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் வரும் அக்டோபர் 14- ஆம் தேதி நவராத்திரி விழா (Navarathiri Festival 2023) தொடங்கவுள்ளதாக இந்து அறக்கட்டளை வாரியம் அறிவித்துள்ளது.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி அறையில் 12 பேர் மட்டும், தனிப்பட்ட இடம், வசதியான கழிவறை – உயரும் தரம்

இது தொடர்பாக, இந்து அறக்கட்டளை வாரியம் (Hindu Endowments Board) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சிங்கப்பூரின் சவுத் பிரிட்ஜ் சாலையில் அமைந்துள்ளது பிரசித்திப் பெற்ற ஸ்ரீ மாரியம்மன் கோயில், வரும் அக்டோபர் 14- ஆம் தேதி சனிக்கிழமை அன்று ஸ்ரீ மாரியம்மன் படி இறங்குதலுடன் நவராத்திரி திருவிழா தொடங்குகிறது. அதேபோல், அக்டோபர் 24- ஆம் தேதி செவ்வாய்கிழமை அன்று விஜயதசமி தினத்தன்று நவராத்திரி திருவிழா நிறைவு பெறும்.

வரும் அக்டோபர் 14- ஆம் தேதி ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரமும், அக்டோபர் 15- ஆம் தேதி அம்மனுக்கு ஸ்ரீ காஞ்சி காமாட்சி அலங்காரமும், அக்டோபர் 16- ஆம் தேதி அம்மனுக்கு ஸ்ரீ மதுரை மீனாட்சி அலங்காரமும், அக்டோபர் 17- ஆம் தேதி அம்மனுக்கு ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி அலங்காரமும், அக்டோபர் 18- ஆம் தேதி அம்மனுக்கு ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினி அலங்காரமும், அக்டோபர் 19- ஆம் தேதி அம்மனுக்கு ஸ்ரீ ஊஞ்சல் அலங்காரமும், அக்டோபர் 20- ஆம் தேதி அம்மனுக்கு ஸ்ரீ கருமாரியம்மன் அலங்காரமும், அக்டோபர் 21- ஆம் தேதி அம்மனுக்கு ஸ்ரீ மஹாலட்சுமி அலங்காரமும், அக்டோபர் 22- ஆம் தேதி அம்மனுக்கு ஸ்ரீ வைஷ்ணவி அலங்காரமும், அக்டோபர் 23- ஆம் தேதி அம்மனுக்கு ஸ்ரீ சரஸ்வதி அலங்காரமும் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளது.

“நீங்க எல்லாரும் தாமதமாக தான் வருவீங்க” – இந்தியரை தகாத வார்த்தையால் பேசிய ஓட்டுநர் – நெட்டிசன்கள் காட்டம்

விஜயதசமி நாளான அக்டோபர் 24- ஆம் தேதி ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு காலை 10.30 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், நண்பகல் 12.15 மணிக்கு உச்சிகால பூஜையும், மாலை 05.30 மணிக்கு நித்திய பூஜையும், மாலை 06.30 மணிக்கு உபய பூஜையும் நடைபெறவுள்ளது.

அதேபோல், அக்டோபர் 14- ஆம் தேதி முதல் அக்டோபர் 23- ஆம் தேதி வரை நாள்தோறும் இரவு 07.30 மணி முதல் இரவு 09.20 மணி வரை பரதநாட்டியம், பக்தி இன்னிசை நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

சிங்கப்பூரின் கிழக்குப் பகுதியில் இரு நாட்களில் இரண்டு தீ சம்பவங்கள்

இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://heb.org.sg/ என்ற இந்து அறக்கட்டளை வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.