சிங்கப்பூர் தேசிய தின நேரலை நிகழ்ச்சியின் போது தவறாக இடம்பெற்ற தமிழ் எழுத்துகள் – மன்னிப்பு கேட்ட குழுவினர்..!

NDP2020 organisers apologise for Tamil text errors displayed during performance
NDP2020 organisers apologise for Tamil text errors displayed during performance (Photo: Mothership/ YouTube)

சிங்கப்பூரில் கடந்த ஆகஸ்ட் 9 அன்று, தேசிய தின (NDP2020) நேரலை நிகழ்ச்சியின் போது தவறான தமிழ் உரை திரையில் காணப்பட்டது. இந்நிலையில், தமிழ் எழுத்துகள் தவறாக இடம்பெற்றதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவினர் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அந்த நிகழ்ச்சியின் போது, LED திரைகளில் காட்டப்படும் வரிகளில் ஒன்றில் தமிழ் எழுத்துகளில் பிழைகள் இருப்பதாக NDP2020 நிர்வாகக் குழு தலைவர் பிரிகேடியர் ஜெனரல் ஃபிரடெரிக் சூ (Frederick Choo) தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் நான்கு பிரபல சந்தைகளில் நீக்கப்பட்ட கட்டுப்பாடு..!

NDP2020 மாலை நிகழ்ச்சியின் போது, LED திரைகளில் தோன்றிய தமிழ் எழுத்துக்கள் அங்குமிங்கும் காட்சியளித்தது, “என் சிங்கப்பூர்” என்று தெளிவாக அமையவில்லை.

தமிழ் பாடல்கள் மற்றும் தமிழ் நிகழ்ச்சிகளுக்காக தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும், எதிர்கால நிகழ்ச்சிகளில் இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் இருக்க, அதிக கவனத்துடன் இருப்போம் என்றும் சூ கூறினார்.

மேலும் NDP2020 EXCO இந்த தமிழ் எழுத்து பிழைக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் மீடியா கார்ப் – வசந்தம் தொலைக்காட்சியில் தமிழ் நிகழ்ச்சிகளில் இடம்பெற்றுள்ள கார்த்திகேயன் சோமசுந்தரம், அந்த தமிழ் எழுத்துகளின் தவறு குறித்து ஏமாற்றத்தை முகநூலில் வெளிப்படுத்தியுள்ளார், உரையின் துல்லியத்தை சரிபார்க்க ஒருவர் கூட இல்லையா என்றும் கேள்வி எழுப்பிருந்தார்.

Justu Oru Question… Why is it that officials are so excited to talk in Tamil or write in Tamil but they never ensure…

Posted by Karthikeyan Somasundaram on Monday, August 10, 2020

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மிக அணுக்கமாகக் கண்காணிக்கப்படும் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகள்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg