20 வருடங்களுக்கு மேலாக பிளாக் குடியிருப்பாளர்கள் தொல்லை செய்வதாக நூறு முறை புகார்..

Google Maps & Shin Min Daily News

சோவா சூ காங்கில் வசிக்கும் டான் என்ற 52 வயது இல்லத்தரசி ஷின் மின் டெய்லி நியூஸிடம் இருபது வருடங்களுக்கு மேலாக மேல்மாடியில் உள்ள குடியிருப்பாளர்கள் இரவில் சத்தம் போடுவதாக புகார் அளித்துள்ளார்.

பதிலுக்கு, ஏறக்குறைய நூறு முறை அவர் போலீஸ் அதிகாரிகளிடம் புகார்களை அளித்துள்ளதாகவும், ஆனால் அதில் பயனில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்த ஊழியர் சொந்த ஊரில் தற்கொலை – தொடரும் விசாரணை

அவர் ஷின் மின்னிடம் கூறுகையில்: “என் கணவர் கிடங்கு உதவியாளராக பணிபுரிகிறார், அவர் தினமும் அதிகாலை 5 மணிக்கெல்லாம் வெளியே செல்ல வேண்டும். எனவே அவர் இரவில் நன்றாக தூங்கவில்லை என்றால், அது அவரது வேலையை பாதிக்கும்.”

மாடியில் உள்ள குடியிருப்பாளர்கள் அடிக்கடி அதிகாலையில் தண்ணீர் ஓட விடுவதாகவும், சில சமயங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தண்ணீர் விடுவதாகவும் அந்த பெண் கூறினார்.

தண்ணீர் பாயும் சத்தம் அதிகமாக தன் வீட்டில் கேட்பதாகவும் அவர் கூறினார்.

அதோடு மட்டுமல்லாமல், தனது அண்டை வீட்டார் இரவில் நாற்காலிகளை இழுப்பதாகவும், கதவைத் தடாலென்று மூடுவதாகவும் புகார் கூறினார்.

இதுபற்றிய புகாருக்கு, பக்கத்து வீட்டுக்காரர் பதிலளிக்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்திய வம்சாவளி ஆடவருக்கு தூக்கு தண்டனை – சிங்கப்பூர் திட்டவட்டம்