நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாள்- சிங்கப்பூருக்கான இந்திய தூதர்இந்திய தூதர் மரியாதை!

Photo: High Commission of India in Singapore Official Facebook Page

இந்திய நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட மாபெரும் தலைவர்களில் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125- வது பிறந்தநாள் நேற்று (23/01/2023) இந்திய அரசால் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இனி வருமானம் உயரலாம்! – சிங்கப்பூரில் டாக்ஸி, வாடகை வாகன ஓட்டுனர்களின் வருமானம் உயர இதுதான் காரணம்..

கொண்டாடட்டத்தின் ஒரு பகுதியாக, அந்தமான் நிக்கோபார் தீவுகளில் பெயர் இல்லாத 21 தீவுகளுக்கு பரம்வீர் சக்ரா விருதைப் பெற்றவர்களின் பெயரைச் சூட்டினார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி. அதேபோல், இந்தியாவில் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் அவரது உருவப்படத்திற்கு மலர்தூவியும், சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தியும் நேதாஜி பிறந்தநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, பல்வேறு நாடுகளில் இந்திய தூதரகங்களிலும் நேதாஜியின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதைச் செலுத்தினர்.

“விடுமுறையிலும் வேலை” – கடுமையாக உழைக்கும் ஊழியர்களுக்கு நன்றி…

அந்த வகையில், சிங்கப்பூரில் உள்ள இந்திய தேசிய ராணுவத்தின் வரலாற்றுச் சின்னம் (Indian National Army Historic Marker) அருகில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் திருவுருவப்படத்திற்கு சிங்கப்பூருக்கான இந்திய தூதர் பெரியசாமி குமரன் மலர்தூவி மரியாதைச் செலுத்தினார்.