Netflix மோசடி: வாடிக்கையாளர்கள் உஷாராக இருக்க வேண்டும் – போலீஸ் எச்சரிக்கை

netflix-subscription-renewal-spoof-e-mail-scam

Netflix பெயரில் அனுப்பப்படும் மின்னஞ்சல் மோசடிகளில் குறைந்தது ஐந்து நபர்கள் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த மாதத்தில் மட்டும் இந்த வகையான மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் இழந்த தொகை குறைந்தது S$12,500 என்று போலீசார் கூறியுள்ளனர்.

‘அந்தரங்க உறுப்புகளை வீடியோ எடுப்பதே தவறு.. அதை Tiktokல் பதிவேற்றம் செய்வது மகா தவறு..’ – சிக்கிய பணிப்பெண்

Netflix போன்ற நம்பகமான தளங்களில் இருந்து போலி மின்னஞ்சல் அனுப்பப்படுவது போன்று மோசடி செய்யப்படுகிறது.

அதாவது இந்த வகையான மோசடி செய்பவர்கள், வாடிக்கையாளர்கள் சந்தாக்களை புதுப்பிக்க வேண்டுமென கூறி “URL இணைப்பை” கிளிக் செய்ய சொல்லி ஏமாற்றுவார்கள்.

URL இணைப்புகளைக் கிளிக் செய்வதன் மூலம், பாதிக்கப்பட்டவர்கள் மோசடி இணையதளங்களுக்குத் திருப்பி விடப்படுவார்கள்.

அங்கு அவர்களது கிரெடிட் அல்லது டெபிட் கார்டு விவரங்கள் மற்றும் ஒரு முறை கடவுச்சொற்கள் (OTPகள்) வழங்குமாறு கேட்கப்படும்.

பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் செய்யாத பணப் பரிவர்த்தனைகளைக் கண்டறியும் போதுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டதையே உணருவார்கள்.

“சம்பளம் சரியாக கொடுப்பதில்லை.. வேலைல இருந்து தூக்கிட்டாங்க..” சிங்கப்பூரில் ஊழியர்கள் வைக்கும் புகார்கள் – MOM ரிப்போர்ட்