முஸ்தபா சென்டர் அருகே புதிய கிளையைத் திறக்க உள்ளதாக கோமள விலாஸ் உணவகம் அறிவிப்பு!

முஸ்தபா சென்டர் அருகே புதிய கிளையைத் திறக்க உள்ளதாக கோமள விலாஸ் உணவகம் அறிவிப்பு!
Google Image

 

 

சிங்கப்பூரில் உள்ள பிரபல இந்திய சைவ உணவகங்களில் ஒன்று கோமள விலாஸ் உணவகம் (Komala Vilas Restaurant). இந்த உணவகம் கடந்த 1947- ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்தியாவில் இருந்து வரும் பெரும்பாலான இந்தியர்கள், இந்த உணவகத்தில் வந்து உணவருந்திச் செல்கின்றனர். குறிப்பாக, கடந்த 2015- ஆம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி சிங்கப்பூருக்கு வருகைத் தந்த போது, இந்திய பிரதமரும், சிங்கப்பூர் பிரதமரும், இந்த உணவகத்தில் தான் உணவருந்தினர்.

துவாஸில் லாரி, பைக் விபத்து: 25 வயது ஆடவர் சம்பவ இடத்திலேயே மரணம்

இது குறித்த புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலான் நிலையில், கோமள விலாஸ் உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயர்ந்தது.

இந்த உணவகம் எண் 76-78 செராங்கூன் சாலையில் அமைந்துள்ளது. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக, பிரதான உணவகத்தில் இருந்து சுமார் 600 மீட்டர் தொலைவில் புதிய கிளையை வரும் நவம்பர் 01- ஆம் தேதி திறக்க உள்ளதாக கோமள விலாஸ் உணவகம் அறிவித்துள்ளது.

மோட்டார் சைக்கிள் திருட்டு: நான்கு இளையர்கள் கைது

புதிய கிளையில் சுமார் 60 பேர் வரை அமர்ந்து உணவருந்தும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், பிரதான கிளையில் உள்ள உணவு வகைகள் மற்றும் அதன் விலையே, புதிய கிளையிலும் இடம் பெறும் என கோமள விலாஸ் உணவகத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

கோமள விலாஸ் உணவகம் திறக்கவுள்ள புதிய கிளைக்கு அருகிலேயே முஸ்தபா சென்டர் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.