புதிய பேருந்து நிறுத்தம் தொடர்பான எஸ்பிஎஸ் போக்குவரத்து நிறுவனத்தின் அறிவிப்பு!

SBS Transit Ltd

சிங்கப்பூரில் பொதுப்போக்குவரத்து சேவையில் மிக முக்கிய நிறுவனமாக விளங்குகிறது எஸ்பிஎஸ் போக்குவரத்து நிறுவனம் (SBS Transit Ltd). இந்நிறுவனம் பேருந்து மற்றும் ரயில் சேவைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக, இந்நிறுவனத்தின் பேருந்துகளை நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உணவின் சுத்தம், தரம் குறித்து எழுந்த புகார் – கவனம் செலுத்தும் நிறுவனம்

இந்த நிலையில், எஸ்பிஎஸ் போக்குவரத்து நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் கடந்த அக்டோபர் 11- ஆம் தேதி அன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், “மெரினா கார்டன்ஸ் டிரைவ் (Marina Gardens Drive) சாலையின் பேருந்து நிறுத்தத்திற்கு எதிரே மெரினா பாரேஜில் (Marina Barrage) என்ற புதிய பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிறுத்தத்தின் குறியீடு 03361 (Bus Stop Code) ஆகும். 400 எண் கொண்ட பேருந்து இந்த பேருந்து நிறுத்தத்தின் வழியே இயக்கப்படும்.

ஷெண்டன் பேருந்து முனையத்தில் (Shenton Way Bus Terminal) இருந்து புறப்படும் பேருந்து, மெரினா கார்டன்ஸ் சாலை வழியாக, மெரினா பாரேஜிற்கு சென்றடையும். வரும் அக்டோபர் 24- ஆம் தேதி முதல் புதிய பேருந்து நிறுத்தம் செயல்பாட்டுக்கு வருகிறது.” இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதிவுடன், பேருந்து செல்லும் வழித்தடம் கொண்ட வரைபடத்தையும் குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூரில் 23 வயது ஆடவர் உட்பட கொரோனா வைரஸ் காரணமாக மேலும் 15 பேர் உயிரிழப்பு

இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு 1800- 287-2727 என்ற தொலைபேசி எண்ணையும், www.sbstransit.com.sg என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தையும் அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.