சிங்கப்பூரில் மேலும் ஒரு வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் நோய்ப்பரவல்..!

New cluster at S11 Dormitory @ Punggol (Photo: Reuters / Edgar Su)

சிங்கப்பூரில் நேற்றைய நிலவரப்படி, பொங்கோல் S11 வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி புதிய நோய்ப்பரவல் இடமாக சுகாதார அமைச்சகம் (MOH) அறிவித்துள்ளது.

அந்த தங்கும் விடுதியில், புதிதாக உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்கள், முந்தைய 13 தொற்று சம்பவங்களுடன் தொடர்புடையது என்று MOH தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இருந்து தமிழகம் செல்லும் விமானங்களின் அட்டவணை..!

தங்கும் விடுதிகளில் வசிக்கும் 46 ஊழியர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 25 பேர் முந்தைய சம்பவங்களுடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டனர், மேலும் கிருமி பரவுவதைத் தடுக்க ஏற்கனவே அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர் என்று MOH தெரிவித்துள்ளது.

புதிய பாதிப்புகளில், கண்காணிப்புப் பரிசோதனை மூலம் எஞ்சிய 21 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது என்றும் அது தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், சிங்கப்பூரின் மிகப் பெரிய நோய்ப்பரவல் குழுமமாக முன்பு அடையாளம் காணப்பட்ட, 2 Seletar North Link வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி கிருமித்தொற்று இல்லாத இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்ட நோய்ப்பரவல் குழுமங்களான, Kian Teck, The Leo, Sungei Tengah Lodge, Tuas South, Westlite Toh Guan ஆகிய வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் மேலும் தொற்று சம்பவங்கள் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன.

இதையும் படிங்க : உலகின் முதல் மிதக்கும் Apple ஸ்டோர் சிங்கப்பூரில்… திறக்கும் தேதி அறிவிப்பு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…