சிங்கப்பூரில் எகிறிய தொற்று பாதிப்பு… ஒரே நாளில் 13,208 பேருக்கு உறுதி

TODAY

சிங்கப்பூரில் நேற்று பிப்., 4 நிலவரப்படி, புதிதாக 13,208 பேருக்கு COVID-19 பாதிப்பு பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) கூறியுள்ளது.

இதில் 13,046 பேர் உள்ளூர் அளவிலும், மேலும் 162 பேர் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்தவர்கள் என்றும் MOH கூறியுள்ளது.

மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த ஊழியர்… வெளிநாட்டுக்குத் தப்பி, திருச்சி வந்தபோது கைது!

மேலும் 6 பேர் கிருமி தொற்றால் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சகத்தின் (MOH) இணையதள தொற்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 866ஆக உள்ளது.

MOH-ன் புதிய அணுகுமுறையின் கீழ், தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கையில் நடைமுறை 2ன் மொத்த எண்ணிக்கையும் இதில் அடங்கும்.

வெள்ளிக்கிழமை பதிவான சம்பவங்களில், நடைமுறை 2ல் 10,336 பேருக்கு நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன.

இதில் 24 பேர் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்தவர்கள் மற்றும் 10,312 பேர் உள்ளூர் அளவில் பாதிக்கப்பட்டவர்கள்.

PCR சோதனைகள் மூலம் மேலும் 2,872 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 138 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மற்றும் 2,734 பேர் உள்ளூர் அளவில் பாதிக்கப்பட்டவர்கள்.

சிங்கப்பூர் காட்டில் 33 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்த மர்ம மனிதர் – யார் அவர்?