சிங்கப்பூரில் மேலும் புதிதாக 5 கிருமித்தொற்று குழுமங்கள் அடையாளம்

Pic: Today

15 ஜலான் டெபாங்கில் உள்ள ஹோம்’ஸ் ஃபேவரிட் பிரைவேட் லிமிடெட் உட்பட ஐந்து புதிய கிருமி குழுமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

ஆறு பேருக்கு அங்கு தொடர்பு இருப்பது கண்டறிந்துள்ளதாகவும், அந்த வளாகத்தில் தொடர்ந்து கிருமி பரவும் வாய்ப்பு இருப்பதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மூன்று வாகனம் சம்மந்தப்பட்ட விபத்தில் ஆடவர் ஒருவர் உயிரிழப்பு

ஹோம்’ஸ் ஃபேவரிட் பிரைவேட் லிமிடெட், இன்று ஜூலை 29 முதல் அடுத்த மாதம் 12ஆம் தேதி வரை மூடப்படும்.

மேலும், அனைத்து ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டு, சோதனை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜுராங் மீன் வர்த்தக துறைமுகத்துடன் 27 பேருக்கும், KTV குழுமத்துடன் இரண்டு பேருக்கும் பாதிப்பு தொடர்பு கண்டறியப்பட்டுள்ளது.

மொத்தத்தில், தற்போது 44 குழுமங்கள் சுகாதார அமைச்சகத்தின் கண்காணிப்பில் உள்ளன.

செல்லுபடியாகும் “Work pass” இல்லாமல் 8 ஆண்டுகள் வேலை – நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு