சாங்கி விமான நிலையத்தில் இனி பாஸ்போர்ட் கிடையாது.. 2024 முதல் “டோக்கன்” தான்

சிங்கப்பூர் வரும் வெளிநாட்டவர்களுக்கு
Unsplash / Matt Seymour

சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்திலிருந்து புறப்படும் பயணிகளுக்கு இனி பாஸ்போர்ட் தேவை இருக்காது.

பாஸ்போர்ட் அணுகல் இல்லாமல், பயோமெட்ரிக் என்னும் அங்க அடையாள முறையை பயன்படுத்தி தானியங்கு குடிநுழைவு அனுமதியைப் பெறலாம்.

கோவிலில் பெண்ணை அறைந்து, இழிவாக பேசி.. ஆடவர் ஒருவரை தமிழில் மோசமாக திட்டிய இந்தியர்

இந்த புதிய நடைமுறை அடுத்த ஆண்டு 2024 முதல் சாங்கி விமான நிலையத்திலிருந்து புறப்படும் பயணிகளுக்காக நடப்புக்கு கொண்டு வரப்படும் என சொல்லப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் குடிநுழைவு சட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தங்களை நிறைவேற்றிய பின்னர் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

எண்ட்-டு-எண்ட் பயோமெட்ரிக் என்னும் முழுமையான அங்க அடையாள முறை இதில் கடைப்பிடிக்கப்படும்.

அதாவது போர்டிங் செயல்பாட்டின் போது பயணிகள் தங்கள் பாஸ்போர்ட், டிக்கெட் மற்றும் போர்டிங் பாஸ் ஆகியவற்றை காட்ட வேண்டியதில்லை.

அதற்கு பதிலாக, அங்க அடையாள முறையை பயன்படுத்தி “ஒற்றை அங்கீகார டோக்கன்” வழங்கப்படும்.

அதனை வைத்துக்கொண்டு, அமைக்கப்படும் பல்வேறு தானியங்கி முனையங்களில் பயணிகள் பயன்படுத்தலாம்.

இதனை உள்துறை விவகாரங்களுக்கான இரண்டாவது அமைச்சர் ஜோசபின் தியோ திங்களன்று தெரிவித்தார்.

ஊழியர் விளையாட்டாக செய்த காரியம் அவருக்கே வினையாய் போனது – சிறை விதிப்பு