புதிய கடைத் திறப்பைத் தள்ளி வைத்துள்ளது ‘முஸ்தபா சென்டர்’!

Google Maps

 

சிங்கப்பூரில் பிரபலமான பல்பொருள் அங்காடிகளில் ஒன்று ‘முஸ்தபா சென்டர்’ (Mustafa Centre). இந்த நிறுவனத்தின் கடை லிட்டில் இந்தியா பகுதியில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் கிடைக்கும் அத்தனை பொருட்களும் முஸ்தபா சென்டரில் கிடைக்கும் என்பது இக்கடையின் கூடுதல் சிறப்பு. அதேபோல், இந்த கடை 24 மணி நேரமும் திறந்திருக்கும் என்பது அனைவரும் அறிந்தது.

ஆடவர் ஒருவருக்கு 20 பிரம்படி, 16 ஆண்டுகள் சிறை விதிப்பு

சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பும் முன்பு, இக்கடைக்கு சென்று பொருட்களை வாங்கிக் கொண்டு ஊருக்கு செல்கின்றனர். அதேபோல், முஸ்தபா சென்டரில் காய்கறிகள், பழங்கள், ஆடைகள், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் ஜுவல்லரி கடை என அனைத்தும் உள்ளதால், முஸ்தபா சென்டரில் பொருட்களை வாங்க எப்போதும் கூட்டம் அலைமோதும். குறிப்பாக, சிங்கப்பூரர்கள் அதிகளவில் இந்த கடையில் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

இந்த நிலையில், தனது நிறுவனத்தை விரிவுப்படுத்தத் திட்டமிட்டுள்ள முஸ்தபா சென்டர், மலேசியா நாட்டின் ஜோகூர் பாரு (Johor Bahru) மாநிலத்தின் தம்போய் மாவட்டத்தில் (Tampoi District) உள்ள கேப்பிட்டல் சிட்டி மாலில் (Capital City Mall) உள்ள கட்டிடத்தில் தனது புதிய பல்பொருள் அங்காடி கடையைத் திறக்கவுள்ளதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தது. நடப்பாண்டின் இரண்டாம் பாதியில் இந்த பல்பொருள் அங்காடி திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், 2024- ஆம் ஆண்டு நிதியாண்டின் கடைசி காலாண்டிற்கு கடைத் திறப்பைத் தள்ளிப்போட்டுள்ளது.

சிங்கப்பூர் சர்வதேச குழுமத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!

ஜோகூர் பாரு சோதனைச் சாவடிக்கு அருகில் கேப்பிட்டல் சிட்டி மால் உள்ளது; அதேபோல், வெளிநாட்டில் முஸ்தபா நிறுவனம் திறக்கும் முதல் கடை இது என்பது குறிப்பிடத்தக்கது.