‘ஆங்கிலப் புத்தாண்டு’- ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள்!

'ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் கார்த்திகை மாத விநாயகர் சதுர்த்தி பூஜை நடைபெறும்' என அறிவிப்பு!
Photo: Sri Senpaga Vinayagar Temple

 

ஆங்கிலப் புத்தாண்டு தினமான இன்று (ஜன.01) சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் விநாயருக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்று வருகிறது.

இரண்டு பேருந்துகள் மோதி விபத்து: 4 பயணிகள் மருத்துவமனையில் அனுமதி – ஓட்டுநர் கைது

இது குறித்து ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலய நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “2024- ஆம் ஆண்டுக்கான முதலாவது சிறப்பு அபிஷேகம், ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் இன்று (ஜன.01) காலை 05.30 மணிக்கு விநாயகருக்கு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து காலை 07.00 மணிக்கு புதுவருட விசேட பூஜையும், காலை 09.00 மணிக்கு சங்கல்ப்பமும் சிறப்பு கணபதி ஹோமமும் நடைபெற்றது.

காலை 10.20 மணிக்கு விசேட திரவிய அபிஷேகமும், பிரதான கும்பம் திருவீதி வலமும், காலை 11.00 மணிக்கு விசேட பூஜையும், காலை 11.15 மணிக்கு காளாஞ்சி வழங்குதலும், பிரசாதம் வழங்குதலும் நடைபெறவுள்ளது. பகல் 12.00 மணிக்கு உச்சிக்கால பூஜையும், மாலை 04.30 மணிக்கு சங்கல்ப்பமும், கணபதி ஹோமமும், காலை 05.50 மணிக்கு விசேட திரவிய அபிஷேகமும், பிரதான கும்பம் திருவீதி வலமும், மாலை 06.30 மணிக்கு விசேட மாலை பூஜையும், இரவு 07.30 மணிக்கு காளாஞ்சி வழங்குதலும், பிரசாதம் வழங்குதலும் நடைபெறும்.

விமானத்தில் பயணிக்கு வழங்கப்பட்ட சாண்ட்விச்சில் புழு இருந்ததால் பரபரப்பு!

இப்புத்தாண்டு தினத்தில் விநாயகப் பெருமானைத் தரிசித்து திருவருட் பிரசாதம் பெற்றுக் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளது.